லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை: தேவ கவுடா

Posted By:
Subscribe to Oneindia Tamil
No alliance in Lok Sabha election: HD Deve Gowda
ஷிமோகா: லோக்சபா தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடாது என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார்.

ஷிமோகாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேவ கவுடா, லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அனைத்துக் கட்சிகளும் செய்து வருகின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. வரும் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.

கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
JD(S) patriarch HD Deve Gowda said that his party not alliance with any party for the loksabha election.
Please Wait while comments are loading...