டாப் 10ல் யாருமே கிடையாது.. என்னது பாஜகல ஒரு பணக்கார முதல்வர் கூட இல்லையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய மாநில முதல்வர்களில் யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் யாருக்குக் குறைவான சொத்து இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக சொத்துடன் முதலிடம் பிடித்து இருக்கிறார். இவர் ரூ.177 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார்.

குறைவான சொத்து கொண்டவர்களில் மாணிக் சர்க்கார் (திரிபுரா) முதலிடம் பிடித்துள்ளார். இவர் முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து இந்த இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

31 பேர் லிஸ்ட்

31 பேர் லிஸ்ட்

மொத்தம் 31 முதல்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அருணாச்சல முதல்வர் பிரேமா காந்து இரண்டு பேரும் 100 கோடிக்கும் அதிகமான சொத்து கொண்டவர்கள். இதில் 25 பேர் கோடீஸ்வரர்கள்.

பாஜக முதல்வர்கள்

பாஜக முதல்வர்கள்

இதில் மொத்தம் பாஜக 18 இடங்களில் ஆட்சி நடத்தி வருகிறது. யூனியன் பிரதேசங்களும் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இதில் பாஜக முதல்வர்கள் யாரும் முதல் 10 இடத்தில் வரவில்லை.

பணக்காரர்கள் இல்லை

பணக்காரர்கள் இல்லை

குஜராத் முதல்வர் விஜயகுமார் ரூபாணி மட்டும் 9 கோடி சொத்துடன் 11வது இடத்தில் உள்ளார். அதேபோல் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் 6 கோடி சொத்துடன் 13வது இடத்தில் உள்ளார். முதல் பத்து இடத்தில் மாநில கட்சிகள், காங்கிரஸ் கட்சி முதல்வர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

மிகவும் ஏழை

மிகவும் ஏழை

இந்த நிலையில் மிகவும் ஏழையான முதல்வர்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் இடம்பெற்று உள்ளார். இவரிடம் மொத்தம் 95.75 லட்சம் மட்டுமே சொத்து இருக்கிறது. இவர் ஏழ்மையான முதல்வர்கள் பட்டியலில் 6 வது இடத்தில் இருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Andhara CM Chandrababu Naidu top the list in richest CM in India. He leads the table with 177 crore assets. Thiripura CM Manik Sarkar is the poorest CM in India. Mamata and Mehaboopa lists next to Manik Sarkar. Tamilnadu CM Edappadi Palanisami has 7.80 crore assest only. Asset details of UP CM Yogi Adityanath also got released. In this no BJP CM takes place in top ten in assets list.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற