For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு பங்களாவை நிரந்தரமாக அனுபவிக்க முன்னாள் முதல்வர்களுக்கு உரிமை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா கிடையாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசு பங்களாவை நிரந்தரமாக அனுபவிக்க முதல்வர்களுக்கு உரிமை இல்லை- வீடியோ

    டெல்லி: முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களாவை நிரந்தரமாக அனுபவிக்க உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முந்தைய முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சியின்போது முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா ஒதுக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

    No government accommodation for former chief ministers: Supreme court

    இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது, இந்த வழக்கை நீதிபதிகள், ரஞ்சன் கோகோய், ஆர்.பானுமதி அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்களுக்கு பணிக் காலம் முடிந்த பின் அரசு பங்களா ஒதுக்குவது குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பணிக்காலம் முடிந்த முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா கிடையாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களாவை அனுபவிக்க உரிமை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் முன்னாள் முதல்வர்களுக்கு நிரந்தர குடியிருப்பு வசதி வழங்கிய உத்தரபிரதேச அரசின் சட்டத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

    English summary
    Supreme court orders No government accommodation for former chief ministers. The Supreme Court also canceled the Uttar Pradesh government's statutory provision for permanent residence of former chief ministers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X