மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தடை இல்லை: சுப்ரீம்கோர்ட் திட்டவட்டம்
டெல்லி: அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்கவே முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இத்தடைக்கு எதிராக மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தன.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நுழைவுத் தேர்வு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக நேற்று முன்தினம் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.
ஆனால் இந்த நுழைவுத் தேர்வுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்கவே முடியாது என திட்டவட்டமாக இன்று கூறியுள்ளது.
மேலும் நுழைவுத் தேர்வுகளை தனித்தனியே நடத்த அனுமதி கோரியும் சில மாநிலங்கள் மனுத் தாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்
அத்துடன் வழக்கு நடைபெறும் காலத்தில் மாநிலங்கள் தேர்வு நடத்த தடை ஏதும் இல்லை என்றும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணையை நாளை மறுநாள் மே 5-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications