For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திரபாபு நாயுடுவை கைது செய்யுங்கள்… அரசை கலையுங்கள்: ஆவேசப்பட்ட ரோஜா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நகரி: தேர்தலில் ஓட்டுப்போட எம்.எல்.ஏவுக்குப் பணம் கொடுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய வேண்டும் என்று நகரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ரோஜா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி விலக வேண்டும். என்றும் ஆந்திரா அரசையும் கலைக்க வேண்டும் என்றும் ஆவேசம் பொங்க பேசி அதிரடியை ஏற்படுத்தியுள்ளார் எம்.எல்.ஏ ரோஜா.

தெலுங்கானா மாநில எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டுபோட எம்.எல்.ஏ.வுக்கு சந்திரபாபு நாயுடு பணம் கொடுத்த விவகாரம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு பதவி விலக வேண்டும் என்பது எதிர்கட்சிகளின் வலியுறுத்தலாகும்.இந்நிலையில், லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நகரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆந்திரா அரசை கலையுங்கள்

ஆந்திரா அரசை கலையுங்கள்

இந்த ஆர்பாட்டத்தில் நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா பங்கேற்று ஆவேசமாக பேசினார். அப்போது அவர், ''எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டுபோட எம்.எல்.ஏ.வுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி விலக வேண்டும். ஆந்திரா அரசையும் கலைக்க வேண்டும் என்றார்.

எம்.எல்.ஏவுக்கு லஞ்சம்

எம்.எல்.ஏவுக்கு லஞ்சம்

சந்திரபாபு நாயுடுவின் டெலிபோன் உரையாடல் மூலம் அவர் எம்.எல்.ஏ.வுக்கு லஞ்சம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.

சந்திரபாபு நாயுடு ஒப்புதல்

சந்திரபாபு நாயுடு ஒப்புதல்

எம்.எல்.ஏ.வுக்கு பணம் கொடுத்த ரேவந்த் ரெட்டி 22 முறை பாஸ் மற்றும் பாபு ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். டெலிபோன் உரையாடலில் இருப்பது எனது குரல் இல்லை என்று சந்திரபாபு நாயுடு கூறுகிறார். பின்னர் எனது டெலிபோன் பேச்சு டேப் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதில் இருந்தே லஞ்சம் கொடுத்ததை அவர் ஒத்துக் கொண்டுள்ளார் என்று போட்டு தாக்கினார் ரோஜா.

கைது செய்ய முடியாதா?

கைது செய்ய முடியாதா?

லஞ்சம் கொடுத்தது சாதாரண ஆள் என்றால் இந்நேரம் கைது செய்திருப்பார்கள். முதல்வர் என்பதால் கைது கிடையாதா? சந்திரபாபு நாயுடு, நான் நெருப்பு. லஞ்சத்தை ஒழிப்பேன் என்று மேடையில் பேசுவார். ஆனால், இன்று லஞ்சம் கொடுத்த வழக்கில் அவர் சிக்கியிருப்பதை எல்லா மொழி பேசும் மக்களும் இந்தியா முழுவதும் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டுள்ளார்கள்" என்றார்.

English summary
YSRC State Mahila president and Nagari MLA R.K. Roja on Tuesday led a road-blockade at Bypass Road junction in Nagari, demanding the arrest of Chief Minister N. Chandrababu Naidu, denouncing “note-for-vote politics”. Ms. Roja, along with party workers, blocked traffic on the busy road for nearly an hour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X