டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.73.50 உயர்வு!
டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக ரூ73.50 என உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை டெல்லியில் நள்ளிரவு முதல் அதிரடியாக ரூ73.50 உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ597.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான அனைத்து மானியங்களையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. அதேபோல் மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான விலையை மாதந்தோறும் ரூ4 உயர்த்தலாம் எனவும் லோக்சபாவில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. டெல்லியில் 14.2 கிலோ எடையுள்ள மானியமில்லா வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆகஸ்ட் மாதத்தில் ரூ524 என விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் அதிரடியாக நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ73.50 உயர்த்தப்பட்டிருப்பது டெல்லிவாசிகளை அதிர வைத்துள்ளது. தற்போது டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ597.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 18.11 கோடி நுகர்வோர் மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் 2.66 கோடி பேர் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications