For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒடிஷாவில் மிரள வைக்கும் நவீன்பட்நாயக் செல்வாக்கு.. யாராலும் அடிச்சுக்கவே முடியாது!

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒடிஷாவில் 5-வது முறையாக முதல்வர் பதவியை கைப்பற்றிய நவீன்பட்நாயக் அம்மாநிலத்தில் யாரும் அசைக்க முடியாத ஆகப் பெரும் சக்தியாக திகழ்கிறார். அவரை வீழ்த்திவிடலாம் என கனவு காணும் பாஜகவுக்கே பெரும் சவாலாக இருந்ந்து வருகிறார்.

ஒடிஷாவில் சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் இரண்டும் நடைபெற்றன. லோக்சபாவில் 12 இடங்களையும் சட்டசபையில் 112 இடங்களையும் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கைப்பற்றியது. லோக்சபா தேர்தலில் பாஜக 8 இடங்களைக் கைப்பற்றிய போதும் சட்டசபை தேர்தலில் 23 இடங்களைத்தான் அக்கட்சியால் கைப்பற்ற முடிந்தது. காங்கிரஸ் லோக்சபா தேர்தலில் 1 இடத்தையும் சட்டசபையில் 9 இடங்களையும் வென்றது.

Odish: Naveen enjoys more support from Dalits

ஒடிஷா வாக்காளர்களைப் பொறுத்தவரை 2 விதமான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. மாநில முதல்வராக நவீன்பட்நாயக் தொடர வேண்டும் என்பது அமோக விருப்பம்; அதே நேரத்தில் பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும் என்கிற எண்ணமும் அவர்களிடத்தில் இருக்கிறது. இத்தனைக்கும் பிஜூ ஜனதா ஆதரவாளர்களே மோடிக்கு ஆதரவான நிலையில்தான் இருக்கின்றனர்.

ஒடிஷாவில் தர்மேந்திர பிரதான் மூலமாக பாஜக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்தது. ஆனால் அவருக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்கின்றன புள்ளி விவரங்கள். அதேபோல் மத்திய, மாநில அரசுகள் மீது அனைத்து தரப்பும் சம அளவிலான மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றனர். இரு அரசுகள் மீதான அதிருப்தி என்பது மிஅக்க் குறைவானதுதான். அதே நேரத்தில் ஆதிபழங்குடிகளின் வாக்குகள் பிஜூ ஜனதா தளத்தைவிட பாஜகவுக்கு சற்று கூடுதலாக கிடைத்திருக்கிறது. அதேபோல் ஓபிசி வாக்குகளும் பாஜகவுக்கு அதிகம் கிடைத்துள்ளன. ஆனால் தலித்துகள் நவீன்பட்நாயக்கைத்தான் கொண்டாடி ஆதரித்துள்ளனர்.

3 எம்எல்ஏக்கள்... 50 கவுன்சிலர்கள்.. வளைத்து போட்ட பாஜக.. மமதாவுக்கு நெருக்கடி! 3 எம்எல்ஏக்கள்... 50 கவுன்சிலர்கள்.. வளைத்து போட்ட பாஜக.. மமதாவுக்கு நெருக்கடி!

ஒடிஷாவைப் பொறுத்தவரையில் பிஜூ ஜனதா தளம், பாஜக கூட்டணியில் இருந்த கட்சி. இந்துத்துவா கொள்கையை கடுமையாக எதிர்க்காத கட்சி. அதனால் இரண்டும் ஒரே முகங்கள் என்பது அந்த மாநில வாக்காளர்கள் மத்தியில் ஆழப் பதிந்திருக்கிறது.

English summary
Naveen Patnaik who won for Fifth time in assembly elections got more support from Dalits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X