கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒடிசா.. அசத்தும் முதல்வர் நவீன் பட்நாயக்!
புவனேஷ்வர்: ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அரசு மிகப்பெரிய புரட்சிகளை பல்வேறு துறைகளில் செய்து வருகிறது. கல்வித்துறையிலும் அம்மாநில அரசு பெரிய மாற்றங்களை கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. புதிய கல்விமுறை, அடிப்படை கல்வி மாற்றம் ஆகிய மாற்றங்களை மட்டும் ஒடிசா மேற்கொள்ளவில்லை. ஒவ்வொரு மாணவ, மாணவியரிடம் இருக்கும் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கல்வி சூழல் அங்கு மாற்றப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியர் தங்கள் தனி திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை அம்மாநில அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
இதற்காக அந்த மாநில அரசு 5டி திட்டம் என்ற புதிய திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. Technology, Teamwork, Transparency, Time and Transformation என்ற 5T திட்டத்தை அம்மாநில அரசு பின்பற்றி வருகிறது. இந்த புதிய முறை மூலம் அரசு மேல்நிலை பள்ளிகளிலும், உயர்நிலை பள்ளிகளிலும் டிஜிட்டல் வகுப்பறைகள், விவாதிக்க உதவும் வகுப்பறைகள், இ நூலகம், நவீன அறிவியல் சோதனை கூடங்கள் என்று பல புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பள்ளிகளில் தரத்தை உயர்த்தும் வகையில் முன்னாள் பள்ளி மாணவர்கள், கம்யூனிட்டி உறுப்பினர்கள், லோக்கல் அரசியல் தலைவர்கள் என்று பலரின் உதவிகளை வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒடிசாவில் அனைத்து அரசு பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி முதல் கட்டமாக 1,072 உயர் நிலை பள்ளிகள் ஒடிசாவில் அடையாளம் காணப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் மொத்தமாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டம் காரணமாக இந்த பள்ளிகளில் உடனடியாக கட்டமைப்பு மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமின்றி மாணவிகளின் தன்னம்பிக்கை அதிகரித்தது. கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள உதவியது.
இந்தியா முழுக்க மருத்துவ தேவை அதிகரித்துள்ளது. கொரோனா பரவி வருகிறது. ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில் கூட ஒடிசா மாநில அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து 5 டி கல்வி முறையை கொண்டு வந்து சீர் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
இது திட்டத்தின்படி முதல் கட்டமாக 15 லட்சம் ரூபாய் தொண்டு நிதி உட்பட மொத்தம் 45 லட்சம் ரூபாய் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. High School Transformation Programme திட்டத்தின் முதல் கட்டம் கடந்த நவம்பர் 14ம் தேதி நிறைவு பெற்றது. குறைந்தது அடுத்த 3 வருடங்களுக்காகவாது இந்த திட்டத்தின் கீழ் பாடத்திட்ட ரீதியான மாற்றங்கள் பள்ளிகளில் செய்யப்படும்.எதிர்காலத்திற்கு ஏற்றபடி பள்ளி, கல்லூரிகளை மாற்றும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. எல்லோருக்கும் நல்ல கல்வி கிடைக்க இந்த திட்டம் உறுதி செய்கிறது. ஒடிசா முதல்வரின் தனி செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி வி.கே பாண்டியன்தான் இந்த 5T திட்டத்திற்கும் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரின் நேரடி செயலாக்கத்தின் கீழ் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று உள்ளது.
ஒடிசாவில் இந்த திட்டம் மிகப்பெரிய கேம் சேஞ்சராக உருவெடுத்துள்ளது. மெய்நிகர் வகுப்பறைகள் மற்றும் STEM அடிப்படையிலான அறிவியல் ஆய்வகங்கள் மூலம், மாணவர்கள் பெரிய குறிக்கோளைகளை கொண்டு படிப்பில் கவனம் செலுத்த முடியும். இதற்கு முன், இப்படிப்பட்ட ஏற்பாடுகள் கிராமப்புறங்களில் இல்லை. அதேபோல் மொத்த பள்ளியின் ஈகோ சிஸ்டமும் இதன் மூலம் இணைய மயமாக்கப்படும். இதனால் மாணவர்களின் தேர்வு, மதிப்பெண், வருகை பதிவேடு எல்லோரும் டிஜிட்டல் மயமாகும். எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இணையத்தில் ஏற்றப்படும்.
இந்த திட்டத்தின் முதல் பகுதியில் 4,198 மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும், 381,280 மேல்நிலை பள்ளி மாணவர்களும் ஈடுப்படுத்தப்படுவார்களா. இந்த பள்ளிகளில் படிக்கும் 70 - 80 சதவிகித மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்பம், வசதிகளை அறிமுகப்படுத்தி. அவர்களை சர்வதேச அளவில் தயார் செய்து, மற்ற நாடுகளில் இருக்கும் மாணவர்களுக்கு இணையாக உருவாக்குவதே திட்டத்தின் நோக்கம். இந்த திட்டம் மூலம் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட்போர்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தனித்துவமான கற்பித்தல்-கற்றல் அனுபவங்களைப் பெறுவார்கள். இந்த திட்டம் மூலம் கல்வி ரீதியாக, கட்டமைப்பே ரீதியாக பள்ளிகள் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும். விளையாட்டு, அறிவியல் மற்றும் கலாச்சாரத் துறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் அதற்கான மைதானங்கள், சோதனை மையங்கள் ஆகியவையும் அமைக்கப்படும்.
அதோடு பள்ளிகள் மட்டுமின்றி ஆசிரியர்களையும் புதிய பாடத்திட்டங்களுக்கு தயார் செய்ய இந்த 5டி திட்டம் உதவியாக இருக்கும். ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சிகளை வழங்க திட்டம் உதவும். அவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்க கற்றுகொடுக்கப்பட்டு 21ம் நூற்றாண்டுக்கு ஏற்றபடி கல்வி முறையில் மாற்றம் செய்யப்படும். இதற்காக "Code Club" போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும். இதில் ஆசியர்களுக்கு புதிய பாடம் எடுக்கும் முறை, மாணவர்களிடம் ஆலோசிக்கும் முறை, என்று பல விஷயங்கள் பயிற்றுவிக்கப்படும். உண்மையிலேயே ஒடிசா ஒரு மிக சிறப்பான கல்வி முறையை உருவாக்கி வருகிறது, இது அனைத்து மாணவர்களும் தங்கள் திறனை மேம்படுத்த மற்றும் பள்ளியில் இருக்கும்போது புதிய அனுபவத்தைப் பெற வழி வகுக்கிறது
(இந்த கட்டுரையை எழுதிய மனோஜ் மிஸ்ரா ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சிறப்பு அதிகாரி ஆவார். மின்னணுவியல் & தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் செயலாளராக பணியாற்றி வருகிறார். அவரை [email protected] இல் தொடர்பு கொள்ளலாம்)












Click it and Unblock the Notifications