அரசு மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரசு அமைப்பின்மீது அதிகம் நம்பிக்கை கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில், ஆளும் அரசு மீது சொந்த நாட்டு மக்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கும் நாடுகளின் பட்டியலை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 73 சதவீதம் ஆதரவை பெற்று முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் 73 சதவீத மக்கள் அரசாங்கம் மீது அதிக நம்பிக்கையை கொண்டிருப்பதாக அந்த கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

கனடாவிற்கு 2வது இடம்

கனடாவிற்கு 2வது இடம்

உலக அளவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக 62 சதவீதத்துடன் கனடா நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மக்களிடம் 58 சதவீத ஆதரவை துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகள் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளன.

10வது இடத்திற்கு போன அமெரிக்கா

10வது இடத்திற்கு போன அமெரிக்கா

உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா மீது அதன் சொந்த நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையானது வெறும் 30 சதவீத அளவுக்குத்தான் உள்ளது. அமெரிக்கா இந்த பட்டியலில் 10 வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரீஸ் நாட்டுக்கு கடைசி இடம்தான்

கிரீஸ் நாட்டுக்கு கடைசி இடம்தான்

மக்களின் 13 சதவீத ஆதரவுடன் இந்த பட்டியலில் கிரீஸ் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. வளர்ந்த நாடுகள் என்று கூறப்படும் மேற்குலக நாடுகளில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதையே இந்த கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு

மக்கள் மீது அரசு கொண்டுள்ள அக்கறையும், நெருக்கடியான காலகட்டத்தில் மக்களை எப்படி அரசு பாதுகாக்கிறது என்பதையும், மக்கள் சேவையையும் கருத்தில் கொண்டு இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
OECD report says, India tops global index of countries with the most confidence in their government. The USA government led by President Donald Trump secured only 30 per cent of the people's confidence.
Please Wait while comments are loading...