For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Nadia Comaneci: ஒலிம்பிக் சரித்திரத்தை நிரந்தரமாக மாற்றி எழுதிய ஜிம்னாஸ்டிக் நாயகி

By BBC News தமிழ்
|
Olympics : Story behind the legend gymnasist Nadia Comaneci
Getty Images
Olympics : Story behind the legend gymnasist Nadia Comaneci

அதிக எடை தூக்கியது யார்? அதிக கோல் அடித்தது யார்? அதிக ரன்கள் எடுத்தது யார்? குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்தது யார், அதிக தூரம் வீசியது யார்? என எல்லா விளையாட்டுகளிலும் மிகத் தெளிவான முடிவுகள் கிடைக்கும்.

ஆனால் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற சில விளையாட்டுகளில் முழுக்க முழுக்க நடுவர்களின் தனிப்பட்ட புள்ளிகளைப் பொறுத்து வெற்றியாளர் தீர்மனிக்கப்படுவார்.

அப்படிப்பட்ட விளையாட்டில், ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக 10-க்கு 10 புள்ளிகளைப் பெற்று மொத்த உலகையும் வாய் பிளக்க வைத்த அற்புத வீராங்கனை நாடியா கோமனேகி (Nadia Comaneci) குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

1976ஆம் ஆண்டு கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் வரை, யாருமே ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் 10-க்கு 10 மதிப்பெண்களை வாங்கியதில்லை.

இந்த சாதனையை ஒரு 14 வயது சிறுமி முறியடிப்பார், ஒட்டுமொத்த உலகையும் தன் வித்தையில் கிறங்கடிப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு ஏன் நாடியா கூட எதிர்பார்த்திருக்கமாட்டார் எனலாம்.

நாடியா கோமனேகி
Getty Images
நாடியா கோமனேகி

1976 ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் என்கிற சொல்லைக் கேட்ட உடனேயே நினைவுக்கும் வரும் அத்தனை ஜாம்பவான்களும் களமிறங்கி இருந்தனர்.

1972ஆம் ஆண்டு முனிக் ஒலிம்பிக்கில், அட இப்படியும் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யலாமா? என ஜிம்னாஸ்டிக்ஸுக்கே புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்த ரஷ்யாவின் ஓல்கா கோர்பட், 1968 - 70 காலகட்டத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த லுட்மிலா டொரிஷேவா போன்றவர்களும் இருந்தனர்.

கூடைப்பந்தில் எப்படி அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறதோ, ஒரு காலத்தில் ஒலிம்பிக் ஹாக்கியில் எப்படி இந்தியா ஆதிக்கம் செலுத்தியதோ, அப்படி ஜிம்னாஸ்டிக்ஸில் சோவியத் ரஷ்யா ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலமது.

ஆனானப்பட்ட ரஷ்யாவே ஒரு ரோமானிய வீராங்கனையைப் பார்த்து கொஞ்சம் அச்சப்பட்டது. அந்த வீராங்கனையின் பெயர் நாடியா கோமனேகி. காரணம் 1975ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் நாடியா கோமனேகியின் வித்தையைப் பார்த்து ரஷ்யர்கள் வியந்திருந்தனர்.

1975ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் 14 வயது நாடியா கலந்து கொண்ட ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றார்.அந்த 14 வயது சூறாவளியை எப்படி சமாளிப்பது என்பதிலேயே ரஷ்ய அணியின் தூக்கம் கெட்டது எனலாம்.

1996ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் காலில் தசைநார்கள் கிழிந்த பின்னும் அமெரிக்காவுக்கு முதல் தங்கம் பெற்று கொடுத்த அசல் வீராங்கனை கெர்ரி ஸ்ட்ரக்கைக் குறித்துப் படித்திருப்பீர்களே நினைவிருக்கிறதா?

அந்த கண்டிப்பான கோவக்கார பயிற்றுநரின் பயிற்சிப் பள்ளியில் மிக இளம் வயதில் இருந்தே பட்டை தீட்டப்பட்ட வைரங்களில் ஒருவர் தான் நாடியா கோமனேகி.

நாடியா முதல் பெஞ்சில் அமரும் மாணவர் போல எப்போதும் முதல் ரேங்க் வாங்கும் விளையாட்டு வீராங்கனை.

எட்டு வயதிலேயே, ரோமேனிய நாட்டின் தேசிய அளவிலான சீனியர் பிரிவில் 13ஆவது இடம் பிடித்து 'அட' போட வைத்தவர். அடுத்த ஆண்டே அப்போட்டியில் முதலிடம் பிடித்து தன்னை தேசிய வீராங்கனையாக நிறுவிக் கொண்டார் என்கிறது ஒலிம்பிக்ஸ் சேனல்.

நாடியா கோமனேகி
Getty Images
நாடியா கோமனேகி

சரி 1976 ஒலிம்பிக் போட்டிகளுக்கு வருவோம்.

ரஷ்யர்கள் பெரிதும் பயந்து கொண்டிருந்த நாடியா கோமனேகி Uneven Bar போட்டியில் களமிறங்கினார்.

கணினி போன்ற துல்லியம், வேகம், கலை நயம், நுட்பம், நாடியாவுக்கு தன் உடல் மீதிருந்த அசாத்தியமான கட்டுப்பாடு... என எதிலும் நடுவர்களால் குறை கண்டு பிடிக்க முடியவில்லை.

தன் முழு வித்தையைக் காட்டிவிட்டு ஆணி அடித்தாற் போல தொடை தசைகள் தெறிக்க, நறுக்கென நின்று வில் போல் வளைந்து வணக்கம் வைத்தார்.

1.00 என மதிப்பெண் வந்தது. ஆனால் உண்மையில் 10-க்கு 10 மதிப்பெண்கள் வழங்கி இருந்தனர். அந்த ஒலிம்பிக்கில் 10.00 என புள்ளிகளைக் காட்டுவதற்கான தொழில்நுட்பங்கள் இருக்கவில்லை.

நாடியா கோமனேகி
Getty Images
நாடியா கோமனேகி

அந்த நொடியிலேயே உலக புகழ்பெற்றார் நாடியா. அதுநாள் வரை ஒலிம்பிக் போட்டிகளில் எந்த ஒரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கும் 10-க்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில்லை.

ரோமானியாவின் நாடியா கோமனேகி தான் அந்த ஒலிம்பிக் சாதனை படைத்த முதல் வீராங்கனை என்கிறது ஒலிம்பிக் சேனல். அதே 1976 ஒலிம்பிக்கில் 7 முறை 10-க்கு 10 புள்ளிகளைப் பெற்று, ஒலிம்பிக் நாயகி ஆனார் என்கிறது ஒலிம்பிக்ஸ் வலைதளம்.

அப்போட்டியில் ஆல் ரவுண்ட் அணி பிரிவில் ரஷ்யா தங்கம் வென்றது, ரோமானியா வெள்ளி வென்றது. ஆனால் நாடியா அனைவரின் இதயங்களை வென்றார்.

நாடியா கோமனேகி
Getty Images
நாடியா கோமனேகி

1976 ஒலிம்பிக்கிலேயே ஆல் ரவுண்ட் தனி நபரில் தங்கம், Uneven Bars-ல் தங்கம், Balance Beam-ல் தங்கம், ஆல் ரவுண்ட் அணியில் வெள்ளி, Floor Exercise-ல் வெண்கலம் என மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்றார் அந்த 15 வயது கூட நிறைவடையாத வீராங்கனை.

1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளில், நாடியா கோமனேகி ஒரு தவிர்க்க முடியாத வீராங்கனையாக இருந்தார். Balance Beam-ல் தங்கம், Floor Exercise-ல் தங்கம், ஆல் ரவுண்ட் அணியில் வெள்ளி, ஆல் ரவுண்ட் தனி நபரில் வெள்ளி என பதக்கங்களைக் குவித்தார்.

பீமில் Aerial walkover, Aerial cartwheel backspring, ஃப்ளோரில் double twist dismount, double back salto என பல புதிய முயற்சிகளை ஜிம்னாஸ்டிக்கில் செயல்படுத்திக் காட்டியதும் இவர் தான் என்கிறது ஸ்போர்ட்ஸ்டார் வலைதளம்.

"Not Good... Not Excellent... Perfect" என ஆங்கிலத்தில் ஒரு மொழி உண்டு. அவ்வரிகளுக்கு நிரந்தர சொந்தக்காரகியுள்ளார் நாடியா கோமனேகி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Olympics : Story behind the legend gymnasist Nadia Comaneci
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X