For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உள்ளாட்சி மன்ற தேர்தல்.. இரு வேட்பாளர்களிடையே மோதல்.. ஒருவர் பலி.. ரிஷிவந்தியத்தில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி: கள்ளிக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் கடம்பூர் ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் ஒரு தரப்பினரின் காரில் மோதியதில் பலத்த காயம் அடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Recommended Video

    உள்ளாட்சி மன்ற தேர்தல்.. இரு வேட்பாளர்களிடையே மோதல்.. ஒருவர் பலி.. ரிஷிவந்தியத்தில் பரபரப்பு!

    தமிழகத்தில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

     மே வங்கத்தில் 3 தொகுதிகளை.. அப்படியே தட்டி தூக்கிய திரிணாமுல்.. மிக பெரிய தோல்வியை எதிர்நோக்கி பாஜக மே வங்கத்தில் 3 தொகுதிகளை.. அப்படியே தட்டி தூக்கிய திரிணாமுல்.. மிக பெரிய தோல்வியை எதிர்நோக்கி பாஜக

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட கடம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இரண்டு முறை வெற்றி பெற்று தலைவராக பதவி வகித்த வைத்தியநாதன் என்பவர் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    ஆட்டோ சின்னம்

    ஆட்டோ சின்னம்

    இவரை எதிர்த்து அதே பகுதியைச் சேர்ந்த இந்திராணி குழந்தைவேலு என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த இரண்டு வேட்பாளர்கள் இடையே வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து கடும் போட்டி இருந்து வந்தது. இரண்டு வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் கடம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வெற்றி பெற தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    எதிர் வேட்பாளர்

    எதிர் வேட்பாளர்

    இந்த நிலையில் இன்று காலை கடம்பூர் பஸ் நிறுத்தம் அருகே வைத்தியநாதன் ஆதரவாளர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் வேட்பாளர் இந்திராணி குழந்தைவேலுவின் ஆதரவாளர்கள் காரில் பஸ் நிலையம் அருகே நின்றுள்ளனர். அவர்களைப் பார்த்ததும் அவர்கள் மீது வாகனத்தை ஏற்ற வேண்டும் என்ற நோக்கில் படு பயங்கரமாக மோதியதாக வைத்தியநாதன் வேட்பாளர் தரப்பு கூறினார்கள்.

    5 பேர் காயம்

    5 பேர் காயம்

    இதில் காரில் வேகமாக மோதியதில் வீராச்சாமி என்ற 40 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், அவருக்கு அமுதா என்ற மனைவியும் சிறு வயதில் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அனைவரையும் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்துள்ளனர்.

    ஆதரவாளர்கள்

    ஆதரவாளர்கள்

    இதற்கு நியாயம் கேட்டு வைத்தியநாதன் ஆதரவாளர்கள் திருக்கோவிலூர்- சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருப்பாலபந்தல் காவல்துறை மற்றும் பகண்டை கூட்ரோடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வைத்தியநாதன் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை சமாதானப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.

    சாலை மறியல்

    சாலை மறியல்

    திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாபு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கடம்பூர் கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை யார் கைப்பற்ற வேண்டும் என்ற கடும் போட்டியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    One died in clash between supporters of 2 candidates those who are contested in TN Civic polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X