ஜிஎஸ்டியை தொடர்ந்து 2018 முதல் ஒரே விலையில் பொருட்கள்..மத்திய அரசு முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் 2018ம் ஆண்டு முதல் விமான நிலையம், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பாட்டில், குளிர்பானங்களை ஒரே விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்கும் வகையில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

 One Product, One Price: Govt to forbid charging above MRP in airport

இந்நிலையில் அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஒரே விலையை அமல்படுத்த உணவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள், உள்ளிட்ட பொருட்கள் ஒரே விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகள், விமான நிலையங்கள், வணிக வளாகங்களில் ஒரே விலையில் பொருட்கள் விற்கப்படும் என கூறப்படுகிறது.

இதன் மூலம் எந்த ஒரு பொருளுக்கும் எல்லா இடங்களிலும் ஒரே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின் பெரிய உணவு விடுதிகளில் 28 சதவீதம் வரை வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளதால் இதை தங்களால் அமல்படுத்த முடியாது என உணவு விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
One Product, One Price: Govt to forbid charging above MRP in airport, shopping malls from 2018
Please Wait while comments are loading...