• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நானும் ஒரு நாள் பைலட் ஆவேன்: நாட்களை எண்ணும் புற்றுநோயாளி சிறுவன் நம்பிக்கை

By Siva
|

பெங்களூர்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சந்தன்(14) என்ற சிறுவன் எதிர்காலத்தில் விமானப்படையில் பைலட்டாக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் ஸ்மஸ்திபூர் மாவட்டத்தில் சிறு தொழில் செய்து வந்தவர் கிரிஷ் மண்டல்(39). அவரது மகன் சந்தன்(14). சந்தன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தன் சிகிச்சை பெற வசதியாக மண்டல் குடும்பம் கடந்த 2 ஆண்டுகளாக டெல்லியில் உள்ளது. சந்தன் நன்றாகப் படிப்பான். அவரது ஆசிரியர் அவனின்

ஆர்வத்தை பார்த்து பாராட்டினர் என்றார் மண்டல்.

சந்தனுக்கு விமானங்கள் என்றால் உயிர். விமானங்களை அடுத்து அவருக்கு கம்ப்யூட்டர் என்றால் பிடிக்கும். அவர் கேரம் நன்றாக விளையாடுவார் என்று மண்டல் தெரிவித்தார்.

போன்

இந்த தீபாவளிக்கு என் தந்தை எனக்கு போன் வாங்கிக் கொடுத்தார். அதன் விலை ரூ.4 ஆயிரம் என்று நினைக்கிறன். எனக்கு போன் பிடித்துள்ளது என்று சந்தன் போன் மூலம் ஒன் இந்தியாவிடம் தெரிவித்தார்.

குழந்தைகள் தினம்

போர் விமானங்களை பார்க்க வேண்டும் என்ற சந்தனின் ஆசை குழந்தைகள் தினத்தன்று நிறைவேறியது. இந்திய விமானப்படை சந்தனின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளது. இதுவரைக்கும் நான் விமானங்களை டிவியில் தான் பார்த்துள்ளேன். தற்போது நேரில் பார்த்ததில் மகிழ்ச்சி. நானும் ஒரு நாள் பைலட் ஆவேன் என்றார் சந்தன். ஆனால் சந்தனின் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பதால் அவரின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது.

உதய் பவுன்டேஷன்

டெல்லியில் உள்ள உதய் பவுன்டேஷன் என்ற அமைப்பின் தலைவர் ராகுல் வர்மா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தன் குடும்பத்தை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே பார்த்துள்ளார். அதன் பிறகு அவர் தான் சந்தனின் குடும்பத்திற்கும், அவரது மருத்துவ செலவுக்கும் உதவி செய்து வருகிறார்.

ராகுல்

சந்தன் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இன்னும் 3 மாதங்கள் கடவுள் விரும்பினால் அதிக காலம் அவர் இருப்பார் என்று நினைக்கிறேன். மருத்துவமனையும் வீடுமாக உள்ள அவர் தான் உண்மையான வீரர் என்றார் ராகுல்.

வலி நிவாரணி

சந்தனுக்கு வலி நிவாரணிகள் அதிக அளவில் அளிக்கப்படுகிறது. அவர் ஒரு நாள் விட்டு ஒருநாள் எய்ம்ஸ் மருத்துவமனையில் கீமோதெரபிக்கு செல்கிறார். அவரின் நாட்கள் எண்ணப்படுகிறது. ஆனால் அவர் இருக்கும் நாட்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம். என் மகனை விமானத்தில் அழைத்துச் சென்று அவரது ஆசையை நிறைவேற்றிய விமானப்படைக்கு நன்றி. நான் அவரை அது போன்று அவரை மகிழ்ச்சியாக பார்த்ததே இல்லை என்றார் மண்டல். மண்டல் தற்போது உதய் பவுன்டேஷனில் பணிபுரிகிறார்.

விமானப்படை

விமானப்படை செய்தித் தொடர்பாளரும், விங் கமாண்டருமான எஸ்.எஸ். பெர்டி ஒன்இந்தியாவிடம் கூறுகையில், சந்தனின் ஆசையை நிறைவேற்றியதில் வீரர்கள் பெருமை அடைந்துள்ளனர். நோயை எதிர்த்து போராடும் சந்தனை பார்த்து விமானப்படை தளபதியே பெருமைப்பட்டார். அவர் தான் உண்மையான வீரர். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். அவர் எங்கள் இதயத்தை தொட்டுவிட்டார் என்றார்.

OneIndia Special: I will become a real pilot one day, says terminally-ill boy Chandan

விமான மாடல்

எனக்கு தற்போது நிறைய பைலட் நண்பர்கள் உள்ளனர். நானும் ஒருநாள் பைலட் ஆவேன். நான் எப்பொழுதுமே பார்த்துக் கொண்டிருக்க எனக்கு விமான பொம்மைகள் வேண்டும். அதன் அருகில் தூங்கி அதை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் சந்தன்.

நிதி உதவி

சந்தனின் சிகிச்சைக்கு நிதி உதவி தேவைப்படுகிறது. உங்களால் முடிந்தால் உதவி செய்யலாம். அவரது வங்கி கணக்கு விவரம்:

மாஸ்டர் சந்தன் குமார், கணக்கு எண்: 600510110003936, பேங் ஆப் இந்தியா, ஹவ்ஸ் காஸ் கிளை, ஏ-21, கிரீன் பார்க் மெயின், டெல்லி, ஐ.எப்.எஸ்.சி. கோட்- பிகேஐடி0006005

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
Read in English:
English summary
Master Chandan Kumar, Account No. 600510110003936 (Savings Account), Bank of India, Hauz Khas Branch, A-21, Green Park Main, New Delhi, PIN: 110 016, IFSC Code: BKID0006005 Fourteen-year-old Chandan is on Cloud 9. Thanks to the Indian Air Force (IAF), his biggest dream of becoming a ‘fighter pilot’ has been fulfilled recently. On the eve of Children’s Day, Chandan ‘earned’ his wings after dating the fighter planes and flight simulators.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more