மோடியின் ராஜதந்திரம்.. சிரித்த முகத்துடன் கனிமொழி! ரஷ்யாவுக்கு பறக்கும் எம்பிகள்! இனி தான் கச்சேரியே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு பதில் அடி கொடுத்தது. இந்த நிலையில் தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு இன்று ரஷ்யாவுக்கு சென்றது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் லஷ்கர் இ தொய்பாவின் தலைமையகம் உள்ளிட்ட 9 தளங்கள் தாக்கி அழிக்கபட்டது.

தொடர்ந்து இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை, இந்தியா பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் 10ஆம் தேதி முதல் தாக்குதல் முடிவுக்கு வந்ததாக இரு நாடுகளும் பரஸ்பரம் அறிவித்தன.

Operation Sindhoor Kanimozhi Russia

முன்னதாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டது. தாக்குதல் முடிவடைந்த பிறகு பாகிஸ்தான் இந்தியா ராணுவத்திற்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாக கூறியது. ஆனால் ஆதாரங்கள் எதையும் வெளியிடவில்லை. மேலும் தங்கள் நாட்டின் பொதுமக்கள் மீதும் ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பொய் சொல்லி வந்தது.

ஆனால் முழுக்க முழுக்க தீவிரவாத தளங்களை குறி வைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பொது மக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என இந்திய தரப்பில் முப்படை ராணுவ அதிகாரிகளும் விளக்கம் அளித்தனர். ஆனால் தொடர்ந்து ஒரே பொய்யையே பாகிஸ்தான் சொல்லி வந்தது. இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் அடங்கிய ஏழு குழுக்களும் அதற்கு தலைமை தாங்குபவர்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

அந்த வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த வகையில் இன்று கனிமொழி எம்பி தலைமையிலான குழு ரஷ்யாவுக்கு புறப்பட்டது. தொடர்ந்து ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து நாளை ஆலோசனை நடத்த உள்ளது அந்த குழு. அதற்குப் பிறகு ஸ்பெயின், கிரீஸ், சிலோவேனியா ஆகிய நாடுகளுக்கும் இந்த குழு பயணம் செய்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேசுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+