For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் அறிவிப்பால் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஆந்திராவில் தள்ளிப்போன 50.000 திருமணங்கள்!

ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களில் இன்று நடைபெற இருந்த 50,000க்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

ஹைதராபாத் : ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களில் இன்று நடைபெற இருந்த 50,000க்கும மேற்பட்ட திருமணங்கள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. திருமண செலவுக்கு பணம் இல்லாததால் இந்த திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதையடுத்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏடிஎம் கார்டுகள் மூலம் நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் வரை தான் எடுக்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பணம் எடுக்கவும் டெபாசிட் செய்யவும் விதிக்கப்பட்டது.மோடியின் இந்த அறிவிப்பால் நாட்டில் பெரும் பணத்தட்டுப்பாடு எற்பட்டது. அன்றாட செலவுக்கே பணமின்றி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.

திருமணங்களுக்கு விலக்கு

திருமணங்களுக்கு விலக்கு

திருமணங்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2 .5 லட்சம் ரூபாய் வைர எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காற்றாய் போன சலுகை

காற்றாய் போன சலுகை

ஆனால் அதற்கும் பல்வேறு விதிமுறைகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாற வங்கி அதிகாரிகள் கேட்கின்றனர். இதனால் அந்த இரண்டரை லட்சத்தை கூட எடுக்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஒத்தி வைக்கப்பட்ட திருமணங்கள்

ஒத்தி வைக்கப்பட்ட திருமணங்கள்

திருமணம் நெருங்கிய நிலையில் செலவுக்கு பணமிலலாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆசையாய் நடத்த இருந்த திருமணத்தை வேறு தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். பெரும்பாலான திருமணங்கள் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

வெறுமையாய் போன முகூர்த்த நாள்

வெறுமையாய் போன முகூர்த்த நாள்

தெலுங்கு பேசும் மக்களின் சிறப்பு வாய்ந்த முகூர்த்த நாளான இன்று ஏராளமான பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் திருமண செலவுக்கு தேவையான பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் திருமணங்களை ஜனவரி மாதத்துக்குப் பிறகு ஒத்தி வைத்துள்ளனர்.

வேற தேதி குறிச்சிகொடுங்க ஐயரே

வேற தேதி குறிச்சிகொடுங்க ஐயரே

ஹைதராபாத்தில் மட்டும் 20,000க்கும் மேற்பட்ட திருமணங்கள் இன்று நடக்க இருந்தன. இதில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேறு நல்ல தேதி குறித்து தருமாறு கேட்டதாக அங்குள்ள ஜோசியர் தெரிவித்துள்ளார்.

பணத்தட்டுப்பாடே காரணம்

பணத்தட்டுப்பாடே காரணம்

ஆந்திரா, தெலுங்கான மாநிலங்களில் மட்டும் இன்று நடைபெற இருந்த 50000க்கும மேற்பட்ட திருமணங்கள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பணத்தட்டுப்பாடே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2.5 லட்சம் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

English summary
Many of the 50,000 weddings slated for sunday in Andhra and Telangana, the season's most auspicious day. have been postponed. Due to the families struggle with the currency issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X