For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஒரே தேசம்-ஒரே தேர்தல்": மாநில அரசு கவிழ்ந்தால் 4 ஆண்டுக்கும் ஜனாதிபதி ஆட்சிதானா? ப.சிதம்பரம் கேள்வி

பாஜகவின் ஒரே தேசம் ஒரே தேர்தல் என்கிற முழக்கம் ஒரு ஏமாற்று வித்தை... சாத்தியமற்றது என சாடியுள்ளார் ப.சிதம்பரம்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே தேசம் ஒரே தேர்தல் முழக்கம்...நாடு முழுவதும் சட்டசபைகள் அதிரடி கலைப்பு?- வீடியோ

    டெல்லி: பாஜகவின் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது ஏமாற்று வித்தை.. சாத்தியமில்லாதது என முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

    ப.சிதம்பரம் எழுதிய 'Speaking Truth to Power' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த நூலை வெளியிட்டார்.

    [Read This: விஸ்வரூபமெடுக்கும் "ஒரே தேசம்.. ஒரே தேர்தல்" : நாடு முழுவதும் சட்டசபைகள் அதிரடி கலைப்பு? ]

    இந்நிகழ்வுக்கு பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ப.சிதம்பரம் முன்வைத்த கருத்துகள்:

    நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அதுவும் 30 மாநிலங்களைக் கொண்ட நாட்டில் தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஒரே நேரத்தில் லோக்சபாவுக்கும் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லாதது. இது இன்னொரு தேர்தல்கால ஏமாற்று வித்தை.

    முடியாத ஒன்று

    முடியாத ஒன்று

    ஒரே தேசம், ஒரே வரி என்கிற ஏமாற்று வித்தையைப் போல ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பதும் மாய்மாலம்தான். எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை மாநில கட்சிகள். அவர்களது செயல்திட்டங்கள் குறிப்பிட்ட எல்லைகளைக் கொண்டது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைப்பது கடினம்.

    நடைமுறைக்கு எதிரானது

    நடைமுறைக்கு எதிரானது

    ஒரு மாநில அரசு நாளையே கவிழ்கிறது. லோக்சபா தேர்தல் வரும் வரை 4 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி ஆட்சியேவா அம்மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும்? இது சாத்தியமே இல்லாத ஒன்று.

    பொய் பிரசாரம்

    பொய் பிரசாரம்

    நாட்டில் 75 லட்சம் வேலைவாய்ப்புகளை மார்ச் மாதத்துக்குள் உருவாக்கப் போகிறோம் என்கிறது மத்திய அரசு. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருந்த போது பிஎப் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 23 லட்சமாக உயர்ந்தது. இதுவே 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியபோது மேலும் 25 லட்சமாக அதிகரித்தது.

    சாத்தியமற்ற பிரசாரம்

    சாத்தியமற்ற பிரசாரம்

    ஆனால் தற்போது 2016-17ல் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில் இது எப்படி 75 லட்சமாக உயரும்? இது எப்படி சாத்தியமாகும்?

    தேர்தல் முடிவுகள் வரட்டும்

    தேர்தல் முடிவுகள் வரட்டும்

    ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானதில் பெரும்பான்மையான காங்கிரஸ் தலைவர்களுக்கு மகிழ்ச்சிதான். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்காக காத்திருங்கள்.

    English summary
    Former Union Minister P Chidambaram has rejected the BJP's One Nation One Poll. He called it is another election gimmick like One nation, one tax.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X