For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயணிகள் பாதுகாப்புக்கு செலவிடுங்கள், புல்லட் ரயிலுக்கு அல்ல.. ப.சிதம்பரம் விளாசல்!

புல்லட் ரயில் திட்டம் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

டெல்லி: புல்லட் ரயில் திட்டம் சாதாரண மக்களுக்கான திட்டம் அல்ல. அது பணமதிப்பிழப்பு நடவடிக்கையை போன்ற மக்களைக் கொல்லும் திட்டம் என முன்னாள் நிதிமயமைச்சர் ப. சிதம்பரம் தன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோவும் இணைந்து புல்லட் ரயில் திட்டத்துக்கு கடந்த 14ஆம் தேதி அடிக்கல் நாட்டினர். அப்போதே இந்த திட்டத்தால் ஏழை மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை, இது பணக்காரர்களுக்கான திட்டம் என பல தரப்பிலும் இருந்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் நேற்று மும்பையில் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். இதற்கு தன் டுவிட்டர் பக்க்கத்தில் அஞ்சலி தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பர் புல்லட் ரயில் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பணமதிப்புழப்பு அறிவிப்பு போலவா?

புல்லட் ரயில் திட்டம் பணமதிப்பிழப்பு அறிவிப்பை போன்றது. இது பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை கொல்கிறது என பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்பா? புல்லட் ரயிலா?

ரயில்வே துறை பாதுகாப்பு, மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதி மற்றும் மேம்பட்ட வசதிகளுக்கு செலவு செய்ய வேண்டும். புல்லட் ரயில்களுக்கு அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

பணம் படைத்தவர்களுக்குத்தான் புல்லட் ரயில்

மேலும், புல்லட் ரயில் ஏழைகளுக்கானது அல்ல. அது பணம் படைத்தவர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்குமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹாவும் ப.சியும்!

யஷ்வந்த் சின்ஹாவும் ப.சியும்!

ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சித்து வரும் வேளையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப. சிதம்பரம் மிக கடுமையாக புல்லட் ரயில் திட்டம் குறித்து விமர்சித்துள்ளார்.

English summary
P. Chidamparam criticized about bullet train in Twiiter. He tweeted that it is like demonetization.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X