For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறையில் நான் என்ன ஆடை அணியட்டும்: பூனைப்படையினருடன் ஆலோசித்த ஜெயலலிதா

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பாதுகாப்பு கோட்டையாக மாறியுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் முன்பு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். முதலில் சிறையில் இருந்து 1 கிமீ தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் தண்டனை அறிவிக்கப்பட்டபோது 5 கிமீ தொலைவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Parappana Agrahara turns into a fortress because of Jaya

இந்த உத்தரவுகளால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தான் கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது போன்று எங்கும் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு ஜெயலலிதாவை போலீசார் வி.வி.ஐ.பி. அறையில் அடைத்தனர்.

இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள ஜெயலலிதா சிறையில் இருப்பதால் பரப்பன அக்ரஹாரா பாதுகாப்பு கோட்டையாக மாறியுள்ளது. சிறையில் இருந்து 5 கிமீ தொலைவிற்கு பலவித கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

சிறையில் தான் என்ன உடை அணிய வேண்டும் என்பது குறித்து ஜெயலலிதா தனது கருப்பு பூனைப் படையினரிடம் ஆலோசித்துள்ளார். பச்சைப் புடவை உடுத்தி பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு சிறையில் வெள்ளை புடவை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

English summary
Parappana Agrahara prison has turned into a fortress as former TN CM Jayalalithaa has Z-plus security.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X