For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகன் காதலுக்கு உதவிய பெற்றோர் – ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராம மக்கள்

Google Oneindia Tamil News

சித்தூர்: சித்தூரில் தன்னுடைய மகனுக்கு காதல் திருமணம் செய்து வைத்த பெற்றோரை கிராமத்தினர் அனைவரும் ஊரைவிட்டு தள்ளி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த பொன்னேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமன். இவர் குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஷா என்ற பெண் நர்சிங் படித்து வந்தார்.

Parents ostracize from native due to the help for love…

இருவரும் கடந்த 2 ஆண்டாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவந்தது. அவர்கள் லட்சுமன்-ஸ்ரீஷாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் கிராமத்தில் காதல் திருமணம் செய்யக்கூடாது என்பது அந்த ஊரில் உள்ள கட்டுப்பாடு ஆகும்.

எனவே திருமணத்தை திருப்பதியில் நடத்துவது என இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதியில் இவர்களது திருமணம் நடந்தது. ஊருக்கு சென்றால் எதிர்ப்பு ஏற்படும் என்பதால் புதுமணத்தம்பதியை அருகில் உள்ள பலமனேரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி யுகாதி பண்டிகை வந்ததையொட்டி புதுமண தம்பதியை இரு வீட்டாரும் விருந்துக்கு வருமாறு அழைத்தனர். அதனை ஏற்று லட்சுமன் தனது மனைவி ஸ்ரீஷாவுடன் பொன்னேபள்ளி கிராமத்திற்கு சென்றார்.

அது குறித்து தகவல் அறிந்த கிராம பெரியவர்கள் காதல் திருமணம் செய்த தம்பதியினர் ஊருக்குள் எப்படி காலடி எடுத்து வைக்கலாம் எனக்கேட்டு எதிர்ப்பு தெரிவித்தவாறு லட்சுமனின் தந்தை வீட்டு முன் திரண்டனர். ஊர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்ததற்கு அபராதமாக ரூபாய் 1 லட்சம் செலுத்த வேண்டும் என லட்சுமனிடம் கூறினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் கிராம மக்கள் லட்சுமனின் பெற்றோர் வீட்டிற்கு தண்ணீர், மின்சாரம் கொடுக்கக்கூடாது. ஊரில் எந்த கடைக்காரரும் அவருக்கு பால், காய்கறி உள்ளிட்ட எந்த பொருளையும் கொடுக்கக்கூடாது என தடைவிதித்து அவர்களை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

‘‘இந்த ஊரில்தான் பிறந்து வளர்ந்தேன். எனக்கு வாழும் உரிமை உள்ளது. எங்களை தடுப்பதற்கு நீங்கள் யார்?'' என அவர்களிடம் லட்சுமன் ஆவேசமாக கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தில் உள்ள சிலர் லட்சுமனையும் அவரது பெற்றோரையும் தாக்கினர்.

இது குறித்து சாந்திபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்வதற்காக சென்றபோது போலீசார் அதனை வாங்க மறுத்ததோடு கிராம மக்களிடம் சமரசமாக செல்லும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பலமனேர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு லட்சுமன் சென்றார். அங்கு துணை சூப்பிரண்டு சங்கரிடம் கிராம மக்கள் தாக்கியது குறித்தும் சாந்திபுரம் போலீசார் புகாரை வாங்க மறுத்து வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளது குறித்தும் லட்சுமன் தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக துணை சூப்பிரண்டு சங்கர் உறுதி அளித்தார். அதன்பேரில் லட்சுமன் அங்கிருந்து திரும்பினார். காதல் திருமணம் செய்த வாலிபரும் அவரது பெற்றோரும் தாக்கப்பட்ட சம்பவம் பலமனேர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Chitoor parents Setting aside ostracizes for accept their son’s love marriage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X