For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதிகள் வெறியாட்டம் ஆடிய பாரீஸில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்- சுஷ்மா ஸ்வராஜ்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பாரீஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் இந்தியர்கள் யாரும் பலியாகவில்லை என்றும், அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 129 பேர் பலியாகியுள்ளனர், 352 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஈவு, இரக்கமற்ற இந்த தாக்குதல்களுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Paris Terror Attacks: All Indians Are Safe In Paris, Says Sushma Swaraj

இதற்கிடையே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து இந்திய தூதரகத்தின் துணை தலைவர் மனிஷ் பிரபாத் கூறுகையில்,

தீவிரவாத தாக்குதல்களில் இந்தியர்கள் பலியானதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. தாக்குதல் குறித்த விபரங்களை அறிய ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளோம். இரவு முழுவதும் எங்களுக்கு போன் அழைப்புகள் வந்தன.

சமூக வலைதளம் உள்பட பலவழியாக இங்கு உள்ள இந்திய சமூகத்தினரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம் என்றார்.

இந்நிலையில் இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பிரான்ஸில் உள்ள இந்திய தூதரிடம் தொலைபேசி மூலம் பேசினேன். அனைத்து இந்தியர்களும் பத்திரமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மக்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
No Indian casualty has been reported in the dreadful terror attacks in France that killed at least 129 people and injured 352, External Affairs Minister Sushma Swaraj said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X