சமூக வலைதளங்களில் தம்மை பற்றிய வீடியோ வெளியிட்ட பா.ஜ.க மீது ஹர்திக் பட்டேல் பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

காந்திநகர் : சமூக வலைதளங்களில் தம்மை பற்றிய வீடியோ வெளியிட்ட பாரதிய ஜனதாவுக்கு பட்டேல் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் பட்டேல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தி குஜராத் அரசையே நிலைகுலையச் செய்த இளைஞர் ஹர்திக் பட்டேல். 24 வயதான இந்த இளைஞர் தற்போது பட்டேல் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு உடைய நபராகப் பார்க்கப்படுகிறார்.

Patel Leader Hardik Patel's Private Video shown on Gujarat TV, patel says that this all the BJP ploy

டிசம்பரில் நடக்க இருக்கும் குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ்- பா.ஜ.க இரண்டு கட்சிகளும் தீவிரமாக முயற்சிக்கின்றன. பா.ஜ.க மீது வெறுப்பில் இருக்கும் ஹர்திக் பட்டேல் காங்கிரஸிற்கு ஆதரவு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோலவே ஹர்திக் பட்டேலும் பேசி வருகிறார்.

அதனால், எப்படியாவது ஹர்திக் பட்டேலை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க முயற்சி செய்துவருகிறது. இதற்கு பிடி கொடுக்காமல் இருந்த ஹர்திக் பட்டேல் மீது போலீஸ் மூலமாக வழக்குப்பதியப்பட்டது. அதிலும் ஹர்திக் பட்டேலை கட்டுப்படுத்தமுடியவில்லை.

சில நாட்களுக்கு முன் குஜராத் தொலைக்காட்சி ஒன்றில் பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேலும், வேறு ஒரு பெண்ணும் இருக்கும் வீடியோ காட்சி வெளியானது. இதனால் குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஹர்திக் பட்டேல், பா.ஜ.க என்னைப் பல வழிகளில் வழிக்கு கொண்டு வரப்பார்த்தனர். ஆனால் ,நான் அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் தற்போது இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளனர்.

என்னைப் பழி வாங்குவதாக நினைத்துக்கொண்டு குஜராத் பெண்களை இழிவாக சித்தரிக்கிறது பா.ஜ.க. வேறு எந்த வழியிலும் அவர்களால் அரசியல் செய்ய முடியாததால் இப்படி கீழ்த்தரமான அரசியலில் இறங்கி விட்டனர். இது எதுவும் என்னைப் பாதிக்காது. நான் பா.ஜ.கவிற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Patel Leader Hardik Patel's Private Video shown on Gujarat TV, patel says that this all the BJP ploy and i will continue fight against BJP.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற