For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்களுக்கு அவர்தான் முதல்வராக வேண்டும்.. கருத்து கணிப்பில் உத்தரகாண்ட் மக்கள் கறார்! பாஜகவுக்கு கிலி

Google Oneindia Tamil News

டேராடூன்: சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஹரீஷ் ராவத் தான் முதல்வராக வேண்டும் என பெரும்பாலான மக்கள் கருத்துத் தெரிவித்திருப்பதாக ஏபிபி -சி ஓட்டர்ஸ் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ,பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கு தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது.

கொரோனா: தமிழக அரசின் விதிகளை மீறிய 6 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ்.. சென்னை மாநகராட்சி அதிரடி! கொரோனா: தமிழக அரசின் விதிகளை மீறிய 6 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ்.. சென்னை மாநகராட்சி அதிரடி!

கொரோனா பரவல் காரணமாக ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இருந்தே அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி வருகின்றனர்.

பலம் காட்டும் பாஜக

பலம் காட்டும் பாஜக

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கூறியிருப்பதாக ஏபிபி - சி ஓட்டர்ஸ் நிறுவனம் கூறியிருந்தது. அதன்படி உத்தரகாண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் பாஜகதான் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக ஏபிபி - சி ஓட்டர் சர்வே தெரிவித்துள்ளது. இங்கு 39.8% வாக்குகள் அதாவது 33-39 இடங்களை வென்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டிருந்தது.

உத்தரகாண்ட் மாநிலம்

உத்தரகாண்ட் மாநிலம்

மொத்தம் அங்கு 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் 29-35 இடங்களையும், 35.7 சதவீத வாக்குகள் பெற்று பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன எனவும், ஆம் ஆத்மி 12.6 சதவீத வாக்குகள் பெற்று 1-3 இடங்களை பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்திருந்தது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு முதல்வர் வேட்பாளர்கள் குறித்த பயிற்சிகள் ஆரம்பித்த நிலையில் மக்களின் விருப்பமான முதல்வர் யார் என ஏபிபி - சி ஓட்டர்ஸ் நிறுவனம் உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆய்வு நடத்தியது.

மக்கள் கருத்தால் அதிர்ச்சி

மக்கள் கருத்தால் அதிர்ச்சி

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ஜனவரி மாதத்திற்கான கருத்துக் கணிப்பை ஏபிபி நியூஸ் - சி ஓட்டர்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தின. ஆய்வுகள் முடிந்த நிலையில் தற்போது மக்கள் அதிகம் விரும்பும் முதல்வர் வேட்பாளர்கள் யார் என்ற சுவாரசியமான முடிவுகள் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசம் பஞ்சாப் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போதைய முதல்வர் மக்களின் விருப்பமானதாக இருப்பதாக கூறப்பட்டு இருந்தாலும் உத்தராகண்டில் வெளியாகி உள்ள தகவல் தான் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காங்கிரசின் ஹரிஸ் ராவத்

காங்கிரசின் ஹரிஸ் ராவத்

அதாவது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் அரசாங்கத்திற்கு தலைமையேற்க மக்கள் விரும்புவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத், உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்களின் விருப்ப முதல்வராக தேர்வாகி உள்ளார், 37% பேர் அவரை ஆதரிப்பதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. தற்போதைய முதல்வர் புஷ்கர் சிங் தாமி 29% வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார், அதே நேரத்தில் ராஜ்யசபா எம்பியும் பாஜக செய்தித் தொடர்பாளருமான அனில் பலுனி 18% வாக்குகளுடன் மூன்றாவது மிகவும் விருப்பமான முதல்வர் வேட்பாளராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பெருகும் ஆதரவு

பெருகும் ஆதரவு

செப்டம்பர் 2021 முதல் ஹரிஷ் ராவத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஏபிபி நியூஸ் - சி ஓட்டர்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு காட்டுகிறது. கனக்கெடுப்பு குறித்து பதிலளித்தவர்களில் 30% பேரால் அவர் விரும்பப்பட்டார் எனவும், ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் முதல்வரை பின்னுக்குத் தள்ளிவிட்டு இருப்பது மிகவும் அரிதானது எனவும், ஆனால் பாஜக ஒரு வருடத்திற்குள் மூன்று முதல்வர்களை மாற்றியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
According to a field survey conducted by ABP-C Otters, most people in Uttarakhand are of the view that Harish Rawat should be the Chief Minister of the Congress party in the forthcoming Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X