பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு... நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.39 காசுகளும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.04 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள மாற்றியமைத்து வருகின்றன. 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

Petrol price hiked by Rs 1.39 per litre, diesel up by Rs 1.04

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 39 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 4 காசுகளும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது.

ஏப்ரல் ஒன்றாம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 85 காசுகளும் டீசல் விலை 3 ரூபாய் 41 காசுகளும் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனிடையே மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த நடைமுறை முதற்கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டினம், ஆந்திரா, உதய்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த நடைமுறை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Petrol diesel price has been hiked. Petrol price hiked by Rs 1.39 per litre, diesel up by Rs 1.04
Please Wait while comments are loading...