பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிறு லீவு விட்டால் அவ்வளவுதான்.. மத்திய அரசு எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல் பங்குகள் ஞாயிற்று கிழமைகளில் விடுமுறை அளிக்க மத்திய அரசு எதிப்பு தெரிவித்துள்ளது. பெட்ரோல் டீசல் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஞாயிற்று கிழமைகள் தோறும் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை அளிக்க பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இது மே மாதம் 14-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Petroleum ministry warns the petrol pumps for the leave on sundays

8 மாநிலங்களில் இந்த விடுமுறை முடிவு அமலுக்கு வருகிறது. இதற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் எதிர்ப்பு தெரித்வதுள்ளது. பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோலிய அமைச்சகம் எச்சரித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாக புகார் வந்தாரல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பெட்ரோல் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெட்ரோல் அமைச்சம் கூறியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Petrol pumps will be closed on sundays from May 14th. Central govt opposing the plan of petrol pumps. Petroleum ministry warns the petrol pumps that severe action will be taken if the public face problem without petrol, diesel.
Please Wait while comments are loading...