மற்ற நாடுகளின் 5 செயற்கைக் கோள்களை அட்டகாசமாக நிலை நிறுத்திய இஸ்ரோ!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மற்ற நாடுகளின் 5 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவி சரியான வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வர்த்தக ரீதியாக செயற்கைக்கோள்களை, விண்ணில் செலுத்தும் விஷயத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. 'பி.எஸ்.எல்.வி., சி -- 28' ராக்கெட் மூலம், பிரிட்டன் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

PM congratulates the ISRO team for the successful launch of PSLV-C28

'ஆன்டிரிக்ஸ்' நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி, இஸ்ரோ நிறுவனம், வர்த்தக ரீதியாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இஸ்ரோ, கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏவிய இந்த ராக்கெட், பிரிட்டன் நாட்டின், 'டிராஸ்டர் மேனேஜ்மென்ட் கன்சல்டேஷன்' என்ற, 1,440 கிலோ எடை கொண்ட, மூன்று செயற்கைக்கோள்கள்; அமெரிக்காவைச் சேர்ந்த, 'சரே' நிறுவனத்தின், 'மைக்ரோ, நானோ' என்ற, இரு செயற்கைக்கோள்களை, பூமியில் இருந்து, 654 கிலோ மீட்டர் உயரத்தில், சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

இந்த செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள். பூமியின், இயற்கை வளங்கள், மண் வளம், நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை, இந்த செயற்கைக்கோள்கள் மேற்கொள்ளும்.

PM congratulates the ISRO team for the successful launch of PSLV-C28

இஸ்ரோ கடைசியாக, பிரான்சின் ஸ்பாட் - 7 (714 கிலோ), ஜெர்மனியின் ஐசாட் (14 கி), கனடாவின் என்எல்எஸ் 7.1 (15 கி), என்எல்எஸ் 7.2 (15 கி), சிங்கப்பூரின் வெலாக்ஸ் -1 (7 கி) ஆகிய 5 வெளிநாட்டு செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி -சி23 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. இதன் மொத்த எடை 765 கிலோ ஆகும். இதுதான் அதிகபட்சமாக இருந்தது.

ஆனால், தற்போது அனுப்பியுள்ள 5 செயற்கைகோள்களின் மொத்த எடை 1440 கிலோ ஆகும். இது இஸ்ரோவின் புதிய சாதனையாகும். மேலும் இந்த 5 வெளிநாட்டு செயற்கைகோள்களையும் சேர்த்து, இஸ்ரோ இதுவரை 45 வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

PM congratulates the ISRO team for the successful launch of PSLV-C28

இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், பி.எஸ்.எல்.வி சி 28 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது இந்தியாவிற்கு பெருமையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் 5 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+