For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டுக்கு வந்தா தோசை சுட்டுத் தருவீங்களா.. ருத்ரம்மாவிடம் கேட்ட மோடி!

தமிழகம் வந்தால் தோசை சுட்டு கொடுப்பீர்களா என்று பெண் ஒருவரிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ்நாட்டுக்கு வந்தா தோசை சுட்டுத் தருவீங்களா?-வீடியோ

    டெல்லி: தமிழகம் வந்தால் தோசை சுட்டு கொடுப்பீர்களா என்று பெண் ஒருவரிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்தியா முழுக்க இருக்கும் ஏழை பெண்கள் பயனடையும் வகையில் உஜ்வாலா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி இருக்கிறது.

    இதன்படி பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயனடைந்த பெண்களிடம் இன்று மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாடினார்.

    பயனாளிகளுடன் பேசிய மோடி

    பயனாளிகளுடன் பேசிய மோடி

    எல்லா மாநிலத்தில் உள்ள பயனாளிகளிடமும் அவர் உரையாடினார். தமிழகத்தில் உள்ள பெண்களிடமும் அவர் கான்பிரன்ஸ் மூலம் உரையாடினார்.

    ருத்ரம்மாவிடம் பேசிய மோடி

    ருத்ரம்மாவிடம் பேசிய மோடி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ருத்ரம்மா என்று பெண்ணிடம் மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் மோடி பேசினார். அப்போது மோடி, இப்போது சமைக்க எளிதாக இருக்கிறதா, தோசை இட்லி எல்லாம் சமைக்க முடிகிறதா என்று ஹிந்தியில் கேள்வி எழுப்பினார்.

    சந்தோஷம் வெளிப்படுத்திய ருத்ரம்மா

    சந்தோஷம் வெளிப்படுத்திய ருத்ரம்மா

    இது ருத்ரம்மாவிற்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ருத்ரம்மா, இப்போது சமைக்க மிகவும் எளிதாக இருக்கிறது முன்பு விறகடுப்பில் சமைக்க கஷ்டமாக இருந்தது என்றார்.

    தோசை சுடுவீர்களா

    தோசை சுடுவீர்களா

    அதற்கு பதிலளித்த மோடி, நான் தமிழ்நாடு வந்தால் எனக்கு தோசை சுட்டுக் கொடுப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த பெண் சிரித்துக் கொண்டே கண்டிப்பாக சுட்டுக் கொடுப்பேன் என்றார். இதேபோல் மோடி ஆந்திரா, கேரளா பெண்களுடனும் கலந்துரையாடினார்.

    English summary
    PM Modi asks Dosai from a Tamilnadu woman in PM UJJWALA YOJANA conference.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X