100 நாள்... 'டாப் 10' வேலைகளை லிஸ்ட் போட்டு அமைச்சர்களுக்கு 'டைம்' குறித்த மோடி!
டெல்லி: தனது அமைச்சர்களுக்கு 100 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த 100 நாட்களுக்குள் 10 முக்கியப் பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும், மக்கள் பிரச்சினைகளை கண்டறிய வேண்டும் என்றும் அவர் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க பாணி 100 நாள் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில்தான் இப்படி 100 நாட்களுக்குள் முக்கிய வேலைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற திட்டத்தை முதன் முதலில் நடைமுறைக்குக் கொண்டு வந்து அதன்படி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.
தற்போது அதே பாணியில் இந்தியாவிலும் 100 நாள் இலக்கை தனது அமைச்சர்களுக்கு வைத்துள்ளார் மோடி.

100 நாள் திட்டம்
மோடி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த 100 நாள் திட்டத்தை மோடி முன்வைத்தார்.

அதற்குள் 10 முக்கிய அம்சம்
மேலும் இந்த நாட்களில் கவனம் செலுத்தப்பட வேண்டிய 10 முக்கிய அம்சங்களையும் அவர் அமைச்சர்களுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

கண்டு பிடிச்சுச் சொல்லுங்க
மேலும் இந்த 100 நாட்களில் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டறிந்து தனக்குத் தெரிவிக்குமாறும் அவர் அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

இதுதான் அந்த 10
மோடி அமைச்சர்களிடம் முன்வைத்த 10 முக்கியப் பணிகள் இதுதான்...

பொருளாதார வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சிக்கான தடைக்கற்களை நீக்குவது.
கல்வி, மின்சாரம், குடிநீர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தருவது.

மக்களுக்கான அரசு .. நல்லரசு
அடிப்படைக் கட்டமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்.
மக்களுக்கான அரசு, நல்லாட்சியை உறுதி செய்வது.

எடுத்த கொள்கையில் உறுதி
கொள்கை வகுப்பதில் கால நிர்ணயம் செய்வது.
கொள்கைகளில் ஸ்திரமாகவும், திடமாகவும் இருப்பது.
அரசு டெண்டர்களை மின்னணு ஏலம் மூலம் நடத்துவது.

ஒத்துழைப்பு - ஒருங்கிணைப்பு
அமைச்சகங்களுக்கிடையே சரியான ஒத்துழைப்பை, ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது.
அதிகாரவர்க்கத்தினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவது.
அதிகாரவர்க்கத்திற்கு போதிய சுதந்திரம் மற்றும் அதிகாரத்தை வழங்குவது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications