இலங்கை, வங்கதேச அதிபர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, வங்கதேச அதிபர் அப்துல் ஹமித் ஆகியோருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் சர்வதேச சூரிய ஒளிசக்தி கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க இலங்கை மற்றும் வங்கதேச அதிபர்கள் டெல்லி வருகை தந்தனர்.

PM Modi holds bilateral parleys with Presidents of Bangladesh, SriLanka

டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன நேற்று சந்தித்தார். இதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடியை மைத்ரிபால சிறிசேன சந்தித்து இருதரப்பு உறவு குறித்து உரையாடினார்.

இலங்கை அதிபரான பின்னர் 5-வது முறையாக மைத்ரிபால சிறிசேன இந்தியா வருகை தந்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime Minister Narendra Modi held a series of bilateral meetings with President of Bangladesh Abdul Hamid and Sri Lankan President Maithripala Sirisena on Sunday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற