For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்காக உயிரோடு எரித்தாலும் பயப்படமாட்டேன்: மோடி உணர்ச்சிகர பேச்சு- வீடியோ

ஊழலை எதிர்ப்பதற்காக உயிரோடு எரித்தாலும் கவலையில்லை என்று பிரதமர் மோடி பேசினார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

பானாஜி: கோவாவில் மொபா என்ற இடத்தில் கிரின்பீல்ட் விமான நிலையம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மையம் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகையில், கரென்சி நோட்டு விஷயத்தில், நான் எடுத்தது, பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கை போன்று அல்ல.

இந்தியாவை ஊழலற்றதாக மாற்ற என்னிடம் பல திட்டங்கள் உள்ளன. இந்த கஷ்டம் 50 நாட்களுக்குத்தான். ஒரு முறை சுத்தப்படுத்திவிட்டால், பின் பிரச்சினை வராது. எனக்கு எதிராக உள்ள சக்திகள் பற்றி எனக்கு தெரியும். அவர்கள் என்னை அழிக்கலாம். ஏனென்றால் அவர்களின் 70 ஆண்டு கொள்ளைக்கு தற்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது.

PM Modi speaks about currency ban: Burn me alive, not afraid of anyone

70 ஆண்டு கால நோயை, நான் 17 மாதங்களில் ஒழிக்க வேண்டும். சுதந்திரம் பெற்றதிலிருந்து நடந்த ஊழலை நான் வெளிப்படுத்துவேன். இதற்காக 1 லட்சம் இளைஞர்களை வேலையில் அமர்த்தவேண்டும் என்றாலும், அதையும் செய்வேன். என்னை சிலர் உயிரோடு எரித்தாலும், நான் பயப்பட மாட்டேன். எனக்கு எதிராக உள்ள சக்திகள் பற்றி எனக்கு தெரியும். அவர்கள் என்னை வாழ விடாமல் செய்யலாம். அவர்கள் என்னை அழிக்கலாம். ஏனென்றால் அவர்களின் 70 ஆண்டு கொள்ளைக்கு தற்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் உணர்ச்சிகரமாக பேசினார்.

English summary
Addressing a rally in Goa, Prime Minister Narendra Modi on Sunday said the opposition is not going to spare him for after demonetisation issue but he's ready to face them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X