நாடு நாசமாகப் போனதற்கு "மாண்புமிகு நாசா" சொல்லும் காரணங்கள்..
டெல்லி: நாட்டின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக எதிரிகளாக இருப்பவை ஊடகங்கள், சிபிஐ, நீதித்துறை என்று சகட்டுமேனிக்கு சாடியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி.
டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற நாரயணசாமி பேசியதாவது:
நமது நாட்டில் ஊடகங்கள் தங்களுக்கென சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகின்றன. ஆனால் இதே நிலைமை நீடித்தால் அவற்றை அரசு தூக்கி எறியும் நிலை உருவாகும். அரசாங்கமே சில ஒழுங்குமுறைகளை உருவாக்க நேரிடும்.

ஊடகங்களே விசாரணைகளை மேற்கொண்டு, ஊடகங்களே தண்டனைகளை வழங்கும் தற்போதைய முறை அபாயகரமானது. சமூகத்தில் கண்ணியத்துக்குரிய மனிதர்கள் கூட இதுபோன்ற கட்டமைப்புகளால் சித்தரவதைக்குள்ளாக்கப்படுகின்றனர். சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலைமையோ இன்னும் மோசமாக இருக்கிறது. சில தீர்மானிக்கிற சக்திள் அவப்பெயரை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டுகின்றன.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 122 உரிமங்கள் ஏலம் விடப்பட்டதில் அரசுக்கு ரூ20 ஆயிரம் கோடிதான் கிடைத்தது. ஆனால் உலகமே சொன்னது ரூ1.76 கோடி என்று.. இதற்கு யாரை குறை சொல்வது?
நீதித்துறையைப் பற்றி பேசினால் அவமதிப்பாகிவிடுகிறது. அதற்காக என்மீது யாரோ ஒருநபர் வழக்கும் தொடருவார். மக்களுக்கு சரியான விவரங்களைத் தருவதுதான் ஊடகங்களின் பணியே தவிர ஊடகங்களே விசாரணை மன்றங்களாகிவிடக் கூடாது என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications