For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்லிணக்கத்திற்கு உதாரணம்.. இந்த வருடம் மைசூர் தசராவை தொடங்கி வைத்தது யார் தெரியுமா?

மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மைசூர் தசரா விழாவை இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த கவிஞர் கே எஸ் நிசார் அஹமது இன்று காலையில் தொடங்கி வைத்தார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

மைசூர் : மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மைசூர் தசரா விழா கொண்டாட்டத்தை இஸ்லாமியக் கவிஞர் நிசார் அஹமது இன்று காலையில் சாமுண்டி ஹில் பகுதியில் தொடங்கி வைத்தார்.

மைசூரு தசரா கொண்டாட்ட விழா தொடக்கத்தின் போது முதல்வர் சித்தராமையா, அவரடைய அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் மஹாதேவப்பா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் தன்வீர் உள்ளிட்டோர் இருந்தனர்.

சாமுண்டீஸ்வரி கோவிலின் தீட்சிதர் தசரா விழா கொண்டாட்டம் குறித்து கூறும் போது "நவராத்திரி விழா தொடங்கிவிட்டதன் அறிகுறியாக சாமுண்டீஸ்வரி அம்மனின் பஞ்சலோக சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கவிஞர் நிசார் அஹமது, முதல்வர் மற்றும் இதர முக்கியஸ்தர்கள் கடவுளுக்கு புஷ்பார்ச்சனா செய்து தசரா விழாவை தொடங்கி வைத்தனர்" என்றார்.

சிறப்பு ஏற்பாடுகள்

சிறப்பு ஏற்பாடுகள்

தசரா விழாவை முன்னிட்டு பெண்களின் தாண்டியா நடனம், கலை கண்காட்சிகள், பூக்கண்காட்சி, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிக்ள, புத்தக கண்காட்சி உள்ளிட்ட ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சிக்மகளூரைச் சேர்ந்த பாடகி ராஜம்மாவிற்கு ராஜ்ய சங்கீதா வித்யான் விருது வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சித்தராமையாவின் முதல் தசரா

சித்தராமையாவின் முதல் தசரா

முதல்வர் சித்தராமையாக தன்னுடைய முதல் தசரா அனுபவத்தை அகாசவாணி ரேடியோவில் பகிர்ந்துள்ளார். " நான் என்னுடைய தன்தையுடன் பன்னி மந்தப்பாவிற்கு அருகில் இருக்கும் பேம்பூ பஜாருக்கு அருகே வந்து கொண்டிருந்த போது தசரா பேரணிக்காக காத்திருந்தேன். நான் மராஜாவை பார்க்க ஆவலாக இருந்தேன்.

மறக்க முடியாத நிகழ்ச்சி

மறக்க முடியாத நிகழ்ச்சி

கூட்டம் அதிகமாக இருப்பதால் என்னால் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். அப்போது என்னுடைய அப்பா அவருடைய தோல் மீது உட்கார வைத்து பார்க்கச் செய்தார், அந்தக் காட்சி இன்னும் என் கண் முன்னே நிற்கிறது.

முதல்வராக பங்கேற்பதில் மகிழ்ச்சி

முதல்வராக பங்கேற்பதில் மகிழ்ச்சி

நான் பள்ளி மாணவனாக இருந்த போது தசரா பேரணியின் என்சிசி மாணவனாக பங்கேற்றுள்ளேன். அதன் பிறது எம்எல்ஏ, அமைச்சராக பங்கேற்றேன், இப்போது முதல்வராக தசரா விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

English summary
Poet K S Nisar Ahmed of Nityotsava inaugurates the 407th edition of world famous Mysuru Dasara atop Chamundi Hill at 8.45 am on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X