பனாரஸ் இந்து பல்கலை கழக மாணவி மீது போலீசார் சராமாரி தாக்குதல்... வைரலாகும் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் பனாரஸ் இந்து பல்கலைக் கழக மாணவர்கள் நடத்தி வரும் போராடடத்தில் மாணவி ஒருவரை போலீசார் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி, அது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் கடந்த வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ஒரு மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். அதனையடுத்து மாணவி மயக்கமடைந்தார்.

Police atrocity on Banaras Hindu university

இதனைக் கண்டித்து மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு பல்கலைக் கழக துணைவேந்தர் வீட்டை மாணவிகள் முற்றுகையிட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் மாணவ, மாணவியர் மீது தடியடி நடத்தி, கலைக்க முயன்றது. அப்போது மாணவி ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hindu Banaras university Student affected by sexual atrocity and students of this university agitated against this and police attacked on this students and attack video going on viral.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற