For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுனந்தா புஷ்கர் உடலில் பொலோனியம், பாம்பு விஷம்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் உடலில் கொடிய ரஷ்ய விஷமான பொலோனியம் 210 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள லீலா ஹோட்டலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Polonium 210 found in Sunanda Pushkar's body

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 டாக்டர்கள் அடங்கிய குழு சுனந்தாவின் உடலை பரிசோதனை செய்த இறுதி அறிக்கை போலீசாரிடம் அளித்துள்ளது. இதையடுத்து சுனந்தா விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் குழு அளித்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

சுனந்தா இறப்பதற்கு முன்பு அவருக்கு எந்தவித நோயும் இல்லை. அவர் நலமாக இருந்துள்ளார். அவர் பதற்றத்திற்கான மருந்தான ஆல்பிராக்ஸை எடுத்துக் கொள்ளவில்லை. அவரது உடலில் கபைன், கோட்டினைன், எதில் ஆல்கஹால், பொலோனியம் 210, தாலியம், அசிட்டாமினோபென், நீரியம் ஓலியாண்டர், பாம்பு விஷம் ஆகியவை இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனந்தாவின் உடலில் ஊசி போட்ட தடமும் இருந்துள்ளது. அவருக்கு விஷத்தை வாய் வழியாக கொடுத்தார்களா இல்லை ஊசி மூலம் ஏற்றினார்களா என்பது தெரியவில்லை. பொலோனியம் 210 என்பது ரஷ்யாவில் கிடைக்கும் கொடிய விஷம் ஆகும். பொலோனியம் கிடைக்கும் இடங்கள் ரஷ்யாவில் தான் அதிகம் உள்ளன. பொலோனியம் சாதாரண மக்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடிய விஷம் இல்லை.

சுனந்தா உடலில் ஆல்பிராக்ஸ் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஹோட்டலில் அவரது படுக்கை அருகே ஏராளமான ஆல்பிராக்ஸ் மருந்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Russian poison Polonium 210, snake venom, acetaminophen, ethyl alcohol, caffeine, neerium oleander, cotinine were found in former central minister Shashi Tharoor's wife Sunanda's body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X