For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“பவர்” காட்டும் ராகுல் காந்தி.. “பவர் கட்” செய்யும் பாஜக? ஒற்றுமை யாத்திரையை தடுப்பதாக பரபர புகார்

Google Oneindia Tamil News

சண்டிகர்: பாஜக ஆளும் மாநிலங்களில் ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொண்டபோது அதில் கலந்துகொண்டவர்களின் வீடுகளில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை பாஜக அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

கன்னியாகுமரி மாவட்டம் காந்தி மண்டபத்தில் கடந்த 100 நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு சென்றடைந்தார்.

எனது நடைப்பயணத்தை கண்டு பாஜக அரசுக்கு பயம்.. கொரோனா அதற்கு 'சாக்கு' - ராகுல் காந்தி எனது நடைப்பயணத்தை கண்டு பாஜக அரசுக்கு பயம்.. கொரோனா அதற்கு 'சாக்கு' - ராகுல் காந்தி

கேரளாவில் நடைபயணம்

கேரளாவில் நடைபயணம்

தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை 18 நாட்கள் கேரளாவில் நீடித்தது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக தமிழ்நாட்டிற்குள் மீண்டும் நுழைந்தார். அங்கிருந்து நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி, கர்நாடக மாநில எல்லைக்குள் நுழைந்து கடந்த அக்டோபர் 1 முதல் நடைபயணம் மேற்கொண்டார்.

கர்நாடகாவில் நடைபயணம்

கர்நாடகாவில் நடைபயணம்

பாஜக ஆளும் கர்நாடகாவில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் ராகுல் காந்தியுடன் கலந்துகொண்டனர். இவர் கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில்தான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி வாக்கை செலுத்தினார்.

தெலுங்கானாவில் யாத்திரை

தெலுங்கானாவில் யாத்திரை

கர்நாடகா மாநிலத்தில் நடைபயணத்தை முடித்துக்கொண்ட ராகுல் காந்தி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி செய்யும் தெலுங்கானா மாநில எல்லைக்குள் நுழைந்தார். முக்கிய மாவட்டங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்ட அவர் ஏராளமான அனைத்து தரப்பு மக்களை சந்தித்து பேசினார். தெலுங்கானாவில் 15 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியுடன் தொண்டர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றார்கள்.

மகாராஷ்டிரா சென்ற ராகுல்

மகாராஷ்டிரா சென்ற ராகுல்

இந்த நடைபயணத்தின் 60 வது நாளை தெலுங்கானாவில் நிறைவு செய்த ராகுல் காந்தி, அந்த மாநிலத்தில் நடைபயணத்தை முடித்துக் கொண்டு பாஜக கூட்டணியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சென்றார். அவருக்கு செல்லும் வழியெங்கும் அம்மாநில காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

548 கிலோமீட்டர் நடைபயணம்

548 கிலோமீட்டர் நடைபயணம்

இதனை தொடர்ந்து பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட அவர், கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்ட அவர் டெல்லியை நோக்கி புறப்பட்டு உள்ளார். இதுவரை 548 கிலோ மீட்டர் நடைபயணம் சென்று உள்ள அவர், ஹரியானா மாநிலம் குர்கானில் இருக்கிறார்.

ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

45 மாவட்டங்கள் 9 மாநிலங்களில் நடைபயணம் சென்று வரும் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் பலர் கலந்துகொண்டு வரும் நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் அவர்களின் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார். அரியானாவில் பேசிய அவர், ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை மக்கள் செல்வாக்கை பெற்று இருக்கிறது.

English summary
Senior Congress leaders and former Union Minister Jairam Ramesh have alleged that during Rahul Gandhi's bharat jodo yatra in BJP-ruled states, electricity connections were cut off in the homes of the participants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X