5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: கேரளா, கர்நாடகா, திரிபுரா, மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார்.

மேற்கண்ட மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

President of India appoints new Chief Justices for 5 HCs

மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தினேஷ் மகேஸ்வரியை கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரை வரும் 20-ஆம் தேதிக்குள் பதவியேற்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோல் கேரள மாநில உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த அந்தோணி டோமினிக் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி அஜய் ராஸ்டோகியை திரிபுரா நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், அலகாபாக் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த தருண் அகர்வாலாவை மேகாலய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த அபிலாஷா குமாரி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
President of India has appointed new Chief Justices in Kerala, Karnataka, Tripura, Manipur and Meghalaya High Courts.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற