ஜிஎஸ்டி.. அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய நான் அனுமதித்தது பெருமை அளிக்கிறது.. பிரணாப் பெருமிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி அறிமுக விழா நடைபெற்றது.

President speaks in GST midnight function at Parliament

அறிமுக விழாவில் அருண் ஜேட்லி மற்றும் பிரதமர் மோடி உரையாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

2002ம் ஆண்டில் தொடங்கி தொடர்ந்து ஜிஎஸ்டி உருவாக்கப்பட்டது. ஜிஎஸ்டிக்காக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய நான் அனுமதித்ததை பெருமையாக கருதுகிறேன்.

மத்திய மாநில அரசுகளின் கூட்டாட்சி தத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி வரியால் இறக்குமதி, ஏற்றுமதி துறைகள் வளர்ச்சி பெறும். நான் நிதி அமைச்சராக இருந்தபோது ஜிஎஸ்டி
உருவாக்கத்திற்கு பங்காற்றியுள்ளேன் என்று பிரணாப் முகர்ஜி பேசினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
President Pranab Mukherji speaks in GST midnight function at Parliament.
Please Wait while comments are loading...