ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது.. பகீர் குற்றச்சாட்டு கிளப்பும் ராகுல் காந்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். பாஜக கட்சி இதில் உண்மைகளை மறைப்பதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

பாராளுமன்ற கூட்டத் தொடரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ரபேல் பைட்டர் விமானம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள். எவ்வளவு விலைக்கு இந்த விமானங்கள் வாங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

Rahul Gandhi alleges scam in Rafale Jet deal

ஆனால் நிர்மலா சீதாராமன் இதற்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது ராணுவ ரகசியம் இதையெல்லாம் வெளியிட முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது இதுகுறித்து ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார். அதில் ''ரபேல் விமானம் பற்றி கேட்டால் டாப் ரகசியம் என்று கூறுகிறார்கள். இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று சொல்கிறார்கள் . அதைப் பற்றி கேட்பவர்களுக்கு ஆண்டி இந்தியன் பட்டம் காட்டுகிறார்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

8 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும், அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலும் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பாஜக மீது புதிய ஊழல் புகார் சாட்டப்பட்டு இருக்கிறது. இது டெல்லி வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rahul Gandhi alleges scam in Rafale Jet deal. He says that, ''RM says the price negotiated for each RAFALE jet by the PM and his "reliable" buddy is a state secret. 1.Informing Parliament about the price is a national security threat .2.Brand all who ask, Anti National'' in twitter.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற