For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"யுடர்ன் அரசு" : பா.ஜ.க.வுக்கு எதிராக டெல்லியில் ராகுல் தலைமையில் போராட்டம்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்தார். இந்த போராட்டத்தின் போது மோடி அரசை 'யுடர்ன்' அரசு என்று சாடினார் ராகுல் காந்தி.

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரசால் வெளியிட்ட மோடி அரசுக்கு எதிரான யுடர்ன் என்ற துண்டுப் பிரசுரத்துடன் இன்று காலை தன் கட்சி எம்.பிக்களுடன் ராகுல் காந்தி போராட்டம் நடத்தினார்.

Rahul

"யு-டர்ன் அரசாங்கத்தின் 6 மாதங்கள்" என்று தலைப்பிடப்பட்ட அந்த பிரசுரத்தில், பதவிக்கு வந்த ஆறு மாதங்களில் அரசாங்கம் தன் நிலைப்பாடை மாற்றிக் கொண்ட 25 சம்பவங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. மொத்தம் 30 பக்கங்களைக் கொண்டது இந்த புத்தகம்.

ராகுல் தலைமையிலான இன்றைய ஆர்ப்பாட்டத்தில், மக்களுக்கு வாக்குறுதி அளித்த முக்கியக் கொள்கை நிலைப்பாடுகளுக்கு எதிராக செயல்படுவதால் மோடி அரசாங்கத்தை "யு-டர்ன்" அரசாங்கம் என்று ராகுல் விமர்சித்தார்.

English summary
A day after the Congress released a booklet on alleged U-turns by the NDA government, party vice president Rahul Gandhi led a protest by party MPs in the Parliament over the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X