"காங்கிரஸை ஜெயிக்க வச்சுருப்பா".. சாமி கும்பிட்டு கர்நாடகத்தில் ராகுல் பிரசாரம் தொடங்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொப்பால்: கர்நாடக மாநிலத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வரவுள்ள ராகுல் காந்தி கொப்பால் மாடவட்த்தில் உள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு 4 நாட்கள் பிரசாரத்தை தொடங்கினார்.

கர்நாடக மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சி காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ராகுல் கர்நாடக மாநிலத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.

Rahul Gandhi starts his election campaign from temple visit

சுமார் 4 நாட்கள் சுற்று பயணமாக கர்நாடக மாநிலத்துக்கு வருகை தரும் ராகுல் முதலில் ஹூகிளி கிராமத்தில் உள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு, மாநிலத்தின் பெரிய தர்காவான விரக்தாவிலும் (ஆசைகளை துறக்கும் மடம்) தரிசனம் செய்தார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 41 இடங்களில் 23 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் பிரசார பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசவுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போதும் ராகுல்காந்தி மாநிலத்தின் பல்வேறு கோயில்களில் வழிபாடு நடத்தினார். கொப்பாலில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A buzzing temple at Huligi village, whose goddess Huligemma (Shakti) is seen to be on a par with Kolkata's Kali and Varanasi's Ganga, is preparing to welcome Congress president Rahul Gandhi in his first religious visit in election-bound Karnataka.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற