குஜராத்: டிம்லி நடன கலைஞர்களுடன் இணைந்து ஆடிய ராகுல் காந்தி- வைரலாகும் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தின் டிம்லி எனப்படும் நடனத்தில் பங்கேற்று ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. தற்போதே குஜராத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டிவிட்டது.

Rahul participates in Timli dance in Chhota Udaipur

ராகுல் காந்தி 2-வது கட்டமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். வழக்கமான பொதுக்கூட்டமாக இல்லாமல் மக்களுடன் கலந்துரையாடுதல் போன்ற நிகழ்ச்சிகளிலும் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.

இன்று சோட்டா உதய்பூருக்கு ராகுல் சென்றார். அங்கு ராகுல் காந்திக்கு டிம்லி நடனக் கலைஞர்கள் வரவேற்பளித்தனர். ராகுல் காந்தியுடம் அவர்களுடன் இணைந்து நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ:

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress Vice President Rahul Gandhi participates in ‘Timli’ dance in Chhota Udaipur district on Tuesday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற