For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் வெள்ளத்தில் தவிப்போருக்கு தினசரி 50 லட்சம் குடிநீர் பாட்டில்களை வழங்கும் ரயில்வே துறை!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவுவதற்காக தினசரி 50 லட்சம் குடிநீர் பாட்டில்களை வழங்குகிறது ரயில்வே அமைச்சகம்.

ரயில்வே அமைச்சர் சதானந்தா கெளடா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்த தகவலை இந்திய ரயில்வேயின் செய்தித் தொடர்புக்கான கூடுதல் இயக்குநர் அனில் சக்ஸோனா தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு உதவ உத்தரவு

மக்களுக்கு உதவ உத்தரவு

இதுகுறித்து சக்ஸேனா கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரயில்வே அமைச்சர் கெளடா உத்தரவிட்டுள்ளார்.

ரயில் பாதை சீரமைப்பு

ரயில் பாதை சீரமைப்பு

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, மார்க்கம் துண்டிக்கப்பட்ட கத்ரா - உதம்பூர் ரயில் பாதை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

டெல்லி ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

டெல்லி ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

காஷ்மீருக்குச் செல்ல விரும்புவோருக்காக டெல்லி ரயில் நிலையத்தில் சிறப்புத் தகவல் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

50 லட்சம் குடிநீர் பாட்டில்கள்

50 லட்சம் குடிநீர் பாட்டில்கள்

மேலும் ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தினசரி 50 லட்சம் குடிநீர் பாட்டில்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் சக்ஸேனா.

English summary
ADG Public Relations, Indian Railways, Anil Saxena on Thursday said that Railway Minister DV Sadananda Gowda has given orders to the ministry to help Jammu & Kashmir flood victims in all possible way. Saxena also said that Katra-Udhampur rail connectivity, which had been affected by the floods in Jammu and Kashmir, is back to normal. He said that the ministry have established transit pint and nodal at New Delhi railway station. He also said that the railways department is sending 50 lakh bottles of water daily to the flood ravaged state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X