For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பண்டிகை காலத்தில் அடித்தது ஜாக்பாட்.. ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்தது ரயில்வே!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பண்டிகை காலத்தையொட்டி தனது பணியாளர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது இந்திய ரயில்வே.

ரயில்வே துறையின் அறிவிப்பால் 12.3 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். போனஸ் தொகை ரூ .18,000 முதல் ரூ.19000 வரையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

Railways announces employee bonus, special trains for festive season

ரயில்வே அமைச்சகம், வெளியிட்டுள்ள டிவிட் ஒன்றில் "12.3 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. தசரா & பூஜை விடுமுறை நாட்களுக்கு முன்பு ஊழியர்களின் குடும்பங்களுக்கு புன்னகையை பரிசளிக்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.

இது தவிர, ரயில்வேயின் அடிமட்ட ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக பணியாளர்களுக்கு போனஸ் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழா கால கூட்ட நெரிசலை சமாளிக்க, சுமார் 4,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கூடுதலாக 9,500 கோச்கள் சேர்க்கப்பட உள்ளன. ம் சில பிஸியான ரயில் நிலையங்களில் இந்த காலக்கட்டத்தில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்க விரும்புவோர் 30 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

English summary
The Indian Railways has announced a bonus for its employees ahead of the festival season. Around 12.3 lakh employees will benefit from this announcement. The bonus is expected to be Rs 18,000 to Rs 19,000 per employee. The decision was taken at a Cabinet meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X