ராஜஸ்தானில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, இலவச லேப்டாப், மாட்டு சாணம் கொள்முதல்- காங். அதிரடி வாக்குறுதி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
200 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் வரும் 25-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ராஜஸ்தானில் பெரும்பான்மைக்கு தேவை 101 இடங்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கக் கூடும் என சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி நிலவும் எனவும் தேர்தல் கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசாரம் உச்சகட்டமாக நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் பாஜக வேட்பாளர்களைஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பிரசாரம் செய்கின்றனர்.
இந்நிலையில் இன்று ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆண்டுக்கு ரூ10,000 வழங்கப்படும்.
- சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ500 என்ற விலைக்கு வழங்கப்படும்
- கால்நடைகளின் சாணம் 1 கிலோ ரூ2-க்கு கொள்முதல் செய்யப்படும்
- அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கப்படும்.
- இயற்கை பேரிடர் இழப்புகளுக்கு நஷ்ட ஈடாக பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ரூ15 லட்சம் இலவச காப்பீடு திட்டம் வழங்கப்படும்.
- விவசாயிகளுக்கு ரூ2 லட்சம் வரை வட்டியில்லா கடன்கள் வாங்குவோம்.
- அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்படும்.
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் ராஜஸ்தான் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இத்தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications