ராஜஸ்தான் தொழிற்சாலையில் மோசமான தீவிபத்து.. 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட மோசமான தீவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜாம்வா ராம்கர் பகுதியில் டர்பெண்டைன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்குச் சிறியளவில் பெயின்டகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இத்தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதை கண்டதும் அங்கிருந்த தொழிலாளர்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், அதற்குள் இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த 3 குழந்தைகளும் இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்களின் குழந்தைகள் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த விபத்தில் காயமடைந்த இருவர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications