For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்யசபா துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றிபெற்றுள்ளார்.

மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனின் பதவிக் காலம் கடந்த மாதம் முடிந்தது. காங்கிரஸ் கூட்டணி ஆதரவில் தேர்வு செய்யப்பட்ட பி.ஜே.குரியன் இரண்டு முறை மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்துள்ளார். அவரது பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Rajya Sabha Deputy Chairman Poll: Who will grab the seat this time?

இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்.பி.ஹரிவன்ஸ் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் சார்பில் ஹரிபிரசாத் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

இந்த தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் என்று முன்பே கணிக்கப்பட்டது. மாநிலங்களவையில் உண்மையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 245 ஆகும், ஆனால் பீகாரில் ஒரு இடம் காலியாக உள்ளது. இதனால் தற்போது இருக்கும் 244 உறுப்பினர்கள் மற்றும் தேர்தலில் வாக்களித்தார்கள்.

இதில் வெற்றி பெற 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் தேர்தல் முடிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 120 வாக்குகள் கிடைத்தது. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. இதனால் வெற்றிபெற்ற ஹர்வன்ஷ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மோடி வாழ்த்து:

புதிய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், முன்னாள் பிரதமர் சந்திரசேகருக்கு மிகவும் பிடித்தவரான, ஹரிவன்ஷ் நாராயண் சிங், புதிய ராஜ்யசபா துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் நான் பாராட்டு தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

English summary
Rajya Sabha Deputy Chairman Poll will take place at 11 AM today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X