அயோத்தியில் ராமர் கோவில் கட்ட என்ன விலையும் கொடுப்போம்: பிரவீண் தொகாடியா

Subscribe to Oneindia Tamil

காசியாபாத்: அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்க என்ன விலையும் தர தயாராக இருப்பதாக விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலர் பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.

காசியாபாத் நகரில் தொண்டர்களிடம் பேசிய தொகாடியா, கடந்த 450 ஆண்டுகளில் நம் முன்னோர்களில் சுமார் 4 லட்சம் பேர் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.

praveen togadia

அயோத்தியில் 110 அடி நீளமும் 90 அடி அகலமும் கொண்ட இடம், இராமர் பிறந்த இடம்தான் என நீதிமன்றம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சுற்றியுள்ள இடத்தில் ராமருக்கு மாபெரும் கோயில் கட்டப்படும். இந்துக்களின் நம்பிக்கை இதன் மூலம் வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதிக்கு இடையிலான பிரச்சினை பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் தொடர்கிறது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே சிக்கல் நீடித்து வருகிறது. அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது.

60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் தனது விசாரணையை நிறைவு செய்து 30.09.2010 அன்று தீர்ப்பு கூறியது. தீர்ப்பில் அயோத்தி நிலம் மூன்று தரப்பினருக்கு சொந்தம் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 3 மாதகால அவகாசம் உள்ளது என்றும் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய நிலம் 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதைய நிலை தொடரும் என்றும் கூறப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும் விஎச்பி பொதுச்செயலாளர் பிரவீண் தொகாடியாக தான் செல்லும் இடமெங்கும் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் ஆலயம் அமைக்கப்படும் என்றே பேசி வருகிறார். இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராமர் ஆலயம் பற்றி பேச பிரவீண் தொகாடியாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர் இது தொடர்பாக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+