For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேபாள நிலநடுக்கத்தால் அநாதைகளான 500 குழந்தைகளை தத்தெடுத்தார் பாபா ராம்தேவ்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹரித்துவார்: நிலநடுக்கத்தால், பெற்றோரை இழந்து அனாதைகளான, 500 குழந்தைகளை, யோகா குரு பாபா ராம்தேவ் தத்தெடுத்துள்ளார்.

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, காத்மண்டுவில் தங்கியிருந்த, யோகா குரு ராம்தேவ், கடந்த திங்கட்கிழமை டெல்லி திரும்பினார். நிலநடுக்கத்தால் அனாதைகளான, 500 குழந்தைகளை, அவர் தத்தெடுத்துள்ளார்.

Ramdev adopts 500 children orphaned in Nepal earthquake

நேபாளத்தில் உள்ள, ராம்தேவின், பதஞ்சலி யோகா பீடத்தில் தங்கியுள்ள, ஆச்சார்ய பாலகிருஷ்ணா, தத்தெடுத்த குழந்தைகளின் தேவைகள் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வார்.

குழந்தைகள், பதஞ்சலி யோகா பீடத்தின் மருத்துவமனை மற்றும் யோகா பீடத்திற்காக புதிதாக கட்டப்பட்ட வளாகத்தில் தங்க வைக்கப்படுவர். அவர்களுக்கு, ஐந்தாம் வகுப்பு வரை கல்வி, உணவு, இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதி அளிக்க, பதஞ்சலி யோகா பீடம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

English summary
Yoga guru Ramdev on Monday adopted 500 children orphaned in the earthquake-hit Nepal and said he will render all possible help to them up to fifth standard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X