உச்சநீதிமன்ற நீதிபதிகள் போர்க்கொடி.. அனைவர் கவனமும் ரஞ்சன் கோகாய் சுற்றியே.. ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரி இல்லை... உச்சநீதிமன்ற நீதிபதிகள்- வீடியோ

  டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்த 4 நீதிபதிகளில் ஒருவரான ரஞ்சன் கோகாய் மீது மட்டும் சட்டத்துறை மற்றும் மீடியாதுறையினரின் கவனம் அதிகமாக செலுத்தப்பட்டது ஏன் தெரியுமா.

  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதல் முறையாக, பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

  அப்போது அவர்கள் தனித்தனியாக பேட்டி அளித்தனர். எனினும் அவர்கள் கூறிய சாராம்சத்தை பார்த்தோமேயானால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் நடவடிக்கையைதான் விமர்சனம் செய்தனர்.

   நாடு சிந்திக்க வேண்டும்

  நாடு சிந்திக்க வேண்டும்

  உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் சரியாக இல்லை என்றும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியும் பயன் இல்லை என்றும் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வது குறித்து நாடு சிந்திக்க வேண்டும் என்றும் பேசி நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துவிட்டனர்.

   மிஸ்ரா ஓய்வு பெறுகிறார்

  மிஸ்ரா ஓய்வு பெறுகிறார்

  மேலும் நாடு தழுவிய முக்கிய வழக்குகளை மிஸ்ரா தனக்கு வேண்டப்பட்டவர்களிடமே ஒப்படைக்கிறார் என்றும் குற்றச்சாட்டினர். இந்நிலையில் 4 பேர் பேட்டி அளித்தாலும் அவர்களில் ரஞ்சன் கோகாய் மீது செய்தியாளர்களின் கவனமும் ஆட்சியாளர்களின் கவனமும் திரும்பியது. ஏனெனில் தற்போது தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா இந்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதியோடு ஓய்வு பெறுகிறார்.

   செல்லமேஸ்வர் ஓய்வு

  செல்லமேஸ்வர் ஓய்வு

  பொதுவாக தலைமை நீதிபதி பணியானது பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மிஸ்ராவுக்கு அடுத்த படியாக இருப்பவர் செல்லமேஸ்வர், ஆனால் அவரோ வரும் ஜூன் மாதம் 22ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதாவது மிஸ்ராவுக்கு முன்னரே அவர் ஓய்வு பெறுகிறார்.

   பரிந்துரைப்பாரா மிஸ்ரா

  பரிந்துரைப்பாரா மிஸ்ரா

  அடுத்தபடியாக மூன்றாவது மூத்த நீதிபதியாக உள்ளவர் ரஞ்சன் கோகாய். எனவே அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு கோகாய்கே வாய்ப்புகள் அதிகம். இதனால்தான் அனைவரின் கவனமும் அவர் மீது திரும்பியது. மேலும் தற்போது தலைமை நீதிபதியாக இருப்பரே அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை பணி மூப்பு அடிப்படையில் பரிந்துரைப்பார்.

   இரு நீதிபதிகளும் ஓய்வு

  இரு நீதிபதிகளும் ஓய்வு

  இதை அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னரே பரிந்துரைத்தால்தான் அரசு அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஏதுவாக இருக்கும். ஆனால் மிஸ்ரா மீது ரஞ்சன் கோகாய் ஏராளமான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதன் பி லோக்கூர் இந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதியும், குரியன் ஜோசப் வரும் நவம்பர் 29-ஆம் தேதியும் ஓய்வு பெறுகின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Ranjan Gogoi is the 3rd senior-most judge after CJI Misra, but Chelameswar, second in seniority, will retire soon. So all the eyes are on Ranjan only among the 4 judges who publically accuses Cheif Justice of India Dipak Mishra.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற