கட்சி விரும்பினால் குஜராத் முதல்வராக நான் ரெடி: மூத்த அமைச்சர் நித்தின் பட்டேல்
அகமதாபாத்: பாஜக விரும்பினால் குஜராத் முதல்வராக நான் தயாராக உள்ளேன் என்று மோடி அமைச்சரவையில் நிதித் துறையை கவனித்து வரும் நித்தின் பட்டேல் தெரிவித்துள்ளார்.
மோடி தான் அடுத்த பிரதமர் என்று தேர்தல் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அவர் பிரதமர் ஆகிவிட்டால் குஜராத் முதல்வர் பதவிக்கு பொருத்தமான நபரை தேர்வு செய்யும் பணி ஏற்கனவே துவங்கிவிட்டது.
மூத்த பாஜக அமைச்சர் ஆனந்த் பட்டேல், உத்தர பிரதேச மாநில பாஜக தலைவரும், குஜராத் எம்.எல்.ஏ.வுமான அமித் ஷா, அமைச்சர் சௌரப் பட்டேல், கட்சி தலைவர் புருஷோத்தம் ருபாலா உள்ளிட்டோர் முதல்வர் சீட்டை பிடிக்கும் போட்டியில் உள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து குஜராத் மாநில மூத்த அமைச்சரான நித்தின் பட்டேல் கூறுகையில்,
கட்சி கேட்டுக் கொண்டால் குஜராத் மாநில முதல்வராக இருக்க நான் தயாராக உள்ளேன். நீங்கள் முதல்வராக இருக்க தயாரா என்று எந்த எம்.எல்.ஏ.விடம் கேட்டாலும் தயார் என்று தான் பதில் அளிப்பார்கள். ஏன் விராத் கோஹ்லியிடம் போய் நீங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்க விரும்புகிறீர்களா என்று கேட்டால் இல்லை என்று சொல்லமாட்டார் என்றார்.
மோடி அமைச்சரவையில் நிதி அமைச்சராக உள்ள பட்டேல் கட்சி எடுக்கும் முடிவை தான் உள்பட அனைவரும் கேட்போம் என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications