For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க தயார்: ராகுல் காந்தி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: திமுகவுடன் கூட்டணி வைக்க தயார் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில்,

வரும் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். இது ஒரு சவாலான தேர்தல் தான். இருப்பினும் காங்கிரஸ் வெற்றி பெறும். எங்களின் சாதனைகள் குறித்து மக்களிடையே தெரிவிப்பதில் நாங்கள் இன்னும் சற்று உற்சாகத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும். நான் ஏற்கனவே கூறியது போன்று பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்.

Ready to work with DMK: Rahul Gandhi

தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ராஷ்ட்ரிய லோக் தள் ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததிருந்தது. ஆனால் அதில் திமுக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டும் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன.

இருப்பினும் திமுக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளுடன் மீண்டும் சேர்ந்து பணியாற்ற நாங்கள் எப்பொழுதும் தயாராகவே உள்ளோம். அரசியல் ஆதாயத்திற்காக இந்தியாவை பிரிக்க முயலும் மதவாத சக்திகளை எதிர்த்து போராடும் யாருடனும் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என்றார்.

English summary
Congress vice president Rahul Gandhi told that congress is ready to work with DMK which came out of UPA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X